இந்திய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்றுள்ள விண்டீஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
வெஸ்ட் இண்டீஸிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, விண்டீஸ் அணியுடன் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.
இந்த தொடரின் முதல் போட்டி இன்று நடைபெறுகிறது. குவின்ஸ் பார்க் ஓவல் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்றுள்ள விண்டீஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
விண்டீஸ் அணியுடனான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியின் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டிருந்த ஜடேஜா, காயம் காரணமாக விளையாடாததால் அவருக்கு பதிலாக ஸ்ரேயஸ் ஐயர், துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ஜடேஜாவிற்கு பதிலாக அக்ஷர் பட்டேலுக்கு அணியில் இடம் கிடைத்துள்ளது. ருத்துராஜ் கெய்க்வாட், இஷான் கிஷன், அர்ஸ்தீப் சிங் ஆகியோருக்கும் இந்த போட்டிக்கான ஆடும் லெவனில் இடம் கிடைக்கவில்லை. துவக்க வீரராக சுப்மன் கில்லிற்கு இடம் கிடைத்துள்ளது. சஞ்சு சாம்சன் விக்கெட் கீப்பராக செயல்பட உள்ளார். இது தவிர சூர்யகுமார் யாதவ், ஸ்ரேயஸ் ஐயர், தீபக் ஹூடா ஆகியோர் அணியில் இடம்பெற்றுள்ளனர்.
பந்துவீச்சாளர்கள் வரிசையில் ஷர்துல் தாகூர், யுஸ்வேந்திர சாஹல், முகமது சிராஜ் மற்றும் பிரசீத் கிருஷ்ணா ஆகியோருக்கு இடம் கிடைத்துள்ளது.
அதே போல் விண்டீஸ் அணியின் நட்சத்திர வீரரான ஜேசன் ஹோல்டருக்கு, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், அவர் இந்த போட்டியில் இடம்பெறவில்லை.
முதல் ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியின் ஆடும் லெவன்;
ஷிகர் தவான் (கேப்டன்), சுப்மன் கில், ஸ்ரேயஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), தீபக் ஹூடா, அக்ஷர் பட்டேல், ஷர்துல் தாகூர், முகமது சிராஜ், யுஸ்வேந்திர சாஹல், பிரசீத் கிருஷ்ணா.
முதல் ஒருநாள் போட்டிக்கான விண்டீஸ் அணியின் ஆடும் லெவன்;
ஷாய் ஹோப், பிராண்டன் கிங், சம்ராஹ் ப்ரூக்ஸ், கைல் மேயர்ஸ், நிக்கோலஸ் பூரண், ரோவ்மன் பவல், அகெல் ஹூசைன், ரோமாரியா செப்பர்ட், அல்ஜாரி ஜோசப், குடேகேஷ் மோட்டி, ஜெய்டன் சியல்ஸ்.