டி20க்கு ஜடேஜா வேண்டவே வேண்டாம், பதிலாக இவரை எடுங்கள்! ருத்துராஜ், ரிங்கு சிங் உட்பட 15 பேர் கொண்ட எதிர்கால இந்திய டி20 அணியை தேர்வு செய்த ஹர்பஜன் சிங்!

ஜெய்ஸ்வால், ருத்துராஜ் உட்பட 15 பேர் கொண்ட இளம் டி20 அணியை தேர்வு செய்து வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு இவர்கள் சரியாக இருப்பார்கள் என்று அறிவித்துள்ளார் ஹர்பஜன் சிங்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் முடிவுற்ற பிறகு, அடுத்ததாக இந்திய அணி வருகிற ஜூலை மாதம் இரண்டாவது வாரம் மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு டெஸ்ட் போட்டிகள், மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடுகிறது. போட்டிகளுக்கான தேதி அட்டவணை வெளியிடப்பட்டு விட்டது. இன்னும் வீரர்களின் பட்டியல் அறிவிக்கப்படாமல் இருக்கிறது.

இந்த வருடம் 50-ஓவர் உலகக்கோப்பை நடைபெறுகிறது. அதற்கேற்றவாறு ஒருநாள் போட்டிகளுக்கான அணி தேர்வு செய்யப்படும் என்று இந்த வருடத்தின் துவக்கத்திலேயே அறிவிக்கப்பட்டு இருந்தது.

அதேபோல் அடுத்த வருடம் டி20 உலகக்கோப்பை நடைபெறுகிறது. அதைக்குறிக்கோளாகக் கொண்டு ஹர்திக் பாண்டியா தலைமையிலான இளம் பட்டாளம் கொண்ட அணி உருவாக்கப்படுகிறது என்று பிசிசிஐ தரப்பில் இருந்து கூறப்பட்டது.

இவை இரண்டையும் கருத்தில் கொண்டு, வெஸ்ட் இண்டீஸ் சுற்றுபயணத்தில் டி20 தொடருக்கான 15 பேர் கொண்ட இளம் இந்திய அணியை கணித்து அறிவித்துள்ளார் ஹர்பஜன் சிங். அதில் ஐபிஎல் போட்டிகளில் அபாரமாக செயல்பட்ட திலக் வர்மா, ஜெய்ஸ்வால், ருத்துராஜ், ரிங்கு சிங் ஜித்தேஷ் சர்மா உள்ளிட்ட சிலர் இருக்கின்றனர். இதுகுறித்து ஹர்பஜன் சிங் கூறுகையில்,

“டி20 போட்டிகளை பொருத்தவரை, ஐபிஎல் போன்ற பெரிய தொடர்களில் நன்றாக செயல்பட்ட வீரர்கள் சர்வதேச போட்டிகளிலும் அழுத்தங்களை கையாண்டு விளையாடுவார்கள் என்கிற நோக்கில் இந்த அணியை தேர்வு செய்திருக்கிறேன். சுழல்பந்துவீச்சில் ரவி பிஸ்னாய் மற்றும் சஹல் இருவரும் சிறப்பாக தாக்கத்தை ஏற்படுத்தினர். அவர்களுக்கு இடம் கொடுக்கப்பட்டு இருக்கிறதும்

ஆல்ரவுண்டர்கள் வரிசையில் ஜடேஜாவை விட அக்சர் பட்டேல் நன்றாக செயல்பட்டதாக உணர்கிறேன். ஆகையால் என்னுடைய அணியில் அவருக்கு இடம் கொடுத்திருக்கிறேன். இந்திய அணியின் எதிகால வீரர்களாக இருப்பார்கள் மற்றும் வரும் காலங்களில் இவர்களை பயன்படுத்தும் என்கிற நோக்கில் எடுத்திருக்கிறேன்.” என்றார்.

ஹர்பஜன் சிங் தேர்வு செய்த 15 பேர் கொண்ட இந்திய அணி:

1) சுப்மன் கில்
2) யஷஸ்வி ஜெய்ஸ்வால்
3) ருத்துராஜ் கெய்க்வாட்

4) இஷான் கிஷன்
5) சூர்யகுமார் யாதவ்

6) ரிங்கு சிங்
7) திலக் வர்மா
8) ஹர்திக் பாண்டியா (கேப்டன்)

9) அக்சர் படேல்
10) ஜித்தேஷ் சர்மா
11) யுசுவேந்திர சஹல்
11) ரவி பிஷ்னோய்
13) அர்ஷ்தீப் சிங்
14) ஹர்ஷித் ராணா
15) ஆகாஷ் மத்வால்

Mohamed:

This website uses cookies.