இரண்டு வருடத்திற்கு முன்னால் தீபக் ஹூடாவே, தான் இந்திய அணியில் விளையாடுவோம் என்று எதிர்பார்த்திருக்க மாட்டார் என்று இர்பான் பதான் தெரிவித்துள்ளார்.
2015 ஆம் ஆண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் தன்னுடைய முதல் ஐபிஎல் போட்டியை விளையாட ஆரம்பித்த தீபக் ஹூடா, அடுத்தடுத்து தன்னுடைய சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய கிரிக்கெட் வட்டாரத்தில் பேசுபொருளாக திகழ்ந்தார்.
இருந்த போதும் இவருக்கு நீண்ட ஆண்டுகளாகவே இந்திய அணியில் வாய்ப்பு வழங்கப்படவில்லை. பின் 2021 ஐபிஎல் தொடரில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் இவரை இனிமேலும் புறக்கணிக்க முடியாது என்ற நிலை வந்ததால்,இவரை 2022பிப்ரவரி மாதம் நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரில் இந்திய அணியில் விளையாடுவதற்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது.
அதனை சிறப்பாக பயன்படுத்திய தீபக் ஹூடா., தன்னுடைய திறமையை வெளிப்படுத்தி, தன்னால் என்ன செய்ய முடியும் என்பதை இந்த கிரிக்கெட் உலகத்திற்கு தெரியப்படுத்தினார்.
மேலும் அதற்கு பின் நடைபெற்ற 2022 ஐபிஎல் தொடரிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணியில் தனக்கான ஒரு இடத்தை பிடித்துக் கொண்டார்.
மேலும் அயர்லாந்து அணிக்கு எதிரான டி20 போட்டியில் சதம் அடித்தும், அதற்கு பின் நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான லிமிடெட் தொடரிலும் சிறப்பாக செயல்பட்டும் கோலிக்கு பதில் மாற்றுவீரராக இவரை விளையாடவைக்கலாம் என்று கூறுமளவிற்கு தற்போது மிகப்பெரிய நட்சத்திர வீரராக வளர்ந்துள்ளார்.
இந்த நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான லிமிடெட் அவர் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் நட்சத்திர வீரர் தீபக் ஹூடாவை முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் வல்லுனர்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் இர்பான் பதான், சிறப்பாக செயல்பட்டு வரும் தீபக் ஹூடாவை செய்தியாளர் சந்திப்பில் வாயிலாக பாராட்டி பேசியுள்ளார்.
இதுகுறித்து இர்பான் பதான் பேசுகையில்,“இரண்டு வருடங்களுக்கு முன்னால் தனக்கு இந்திய அணியில் விளையாட வாய்ப்பு கிடைக்கும் என்று தீபக் ஹூடா கூட நினைத்திருக்க மாட்டார்.ஆனால் தற்போது தீபக் ஹூடா நட்சத்திர வீரராக வலம் வருகிறார். வளர்ந்து வரும் வீரர்களுக்கு இவருடைய முன்னேற்றம் ஒரு உதாரணமாக உள்ளது, யாரெல்லாம் கடின உலைப்பொடு உள்ளார்களோ அவர்களுக்கு இது நம்பிக்கையை கொடுக்கும்.அவரை நினைத்தால் எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது, தற்போது அவருக்கு வயது27 அவர் இன்னும் 6முதல்7 ஆண்டுகள் இந்திய அணிக்காக விளையாடுவார்,அவருக்கு அந்த தகுதியும் திறமையும் உள்ளது,நான் எப்பொழுதும் கூருவதெல்லாம், பயிற்சி செய்து அதற்கான பலனை எதிர்பாராதே என்பது தான்,அப்படி செய்தால் அது வேலை செய்யாது, நீங்கள் எதை பற்றியும் கவலைப்படாமல் செயல்பட்டால் தான் அது நமக்கு கிடைக்கும்,இதை கவனத்தில் கொள்ள வேண்டும் ”என்று இர்பான் பதான் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.