ருத்துராஜ் கெய்க்வாட்டிற்கு அணியில் இடம்..? இரண்டு வீரர்கள் அதிரடி நீக்கம்; இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி இது தான் !!

ருத்துராஜ் கெய்க்வாட்டிற்கு அணியில் இடம்..? இரண்டு வீரர்கள் அதிரடி நீக்கம்; இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி இது தான்

விண்டீஸ் அணியுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவன் குறித்து இங்கு பார்ப்போம்.

வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, விண்டீஸ் அணியுடன் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

இந்த தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 141 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று, 1-0 என்ற கணக்கில் தொடரிலும் முன்னிலையில் இருக்கும் நிலையில், இரு அணிகள் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி 20ம் தேதி துவங்க உள்ளது.

முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலையில் இருப்பதால், இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் ஆடும் லெவனில் ஓரிரு மாற்றங்கள் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

கேப்டனான ரோஹித் சர்மா, ஆடும் லெவனில் பெரிய மாற்றங்கள் எதுவும் இருக்காது என செய்தியாளர் சந்திப்பில் பேசியிருந்தாலும், கடந்த போட்டியில் விளையாட வாய்ப்பு கிடைக்காத ருத்துராஜ் கெய்க்வாட், நவ்தீப் சைனி போன்ற சில வீரர்களுக்கு இரண்டாவது போட்டியில் வாய்ப்பு கிடைக்கும் என தெரிகிறது.

துவக்க வீரர்களாக ஜெய்ஸ்வாலும், ரோஹித் சர்மாவுமே களமிறங்குவார்கள் என்பதில் சந்தேகம் இல்லை. மிடில் ஆர்டரில் சுப்மன் கில்லிற்கு பதிலாக ருத்துராஜ் கெய்க்வாட்டிற்கு இடம் கொடுக்கப்படலாம் என தெரிகிறது. இது தவிர விராட் கோலி, ரஹானே மற்றும் இஷான் கிஷன் ஆகியோரும் மிடில் ஆர்டரில் களமிறங்குவார்கள். இதனால் கே.எஸ் பாரத்திற்கு அடுத்த போட்டியிலும் இடம் கிடைக்காது என்றே தெரிகிறது.

ஆல் ரவுண்டர்கள் வரிசையில் ரவீந்திர ஜடேஜா மற்றும் ரவிச்சந்திர அஸ்வின் ஆகியோரே இடம்பெறுவார்கள் என்பதால் அக்‌ஷர் பட்டேலிற்கு அடுத்த போட்டியிலும் வாய்ப்பு கிடைக்காது என்றே தெரிகிறது. பந்துவீச்சாளர்கள் வரிசையில் மாற்றங்கள் இருக்கும் என தெரிகிறது.

ஷர்துல் தாகூருக்கு கடந்த போட்டியில் வெறும் 7 ஓவர்கள் மட்டுமே வழங்கப்பட்டது. இதனால் அடுத்த போட்டியில் ஷர்துல் தாகூருக்கு பதிலாக நவ்தீப் சைனிக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என தெரிகிறது. அதே போன்று ஜெயதேவ் உனாத்கட்டிற்கு பதிலாக முகேஷ் குமாருக்கு வாய்ப்பு கிடைக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவன்;

ரோஹித் சர்மா, யசஸ்வி ஜெய்ஸ்வால், ருத்துராஜ் கெய்க்வாட்/ சுப்மன் கில், விராட் கோலி, அஜின்கியா ரஹானே, இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திர அஸ்வின், முகமது சிராஜ், நவ்தீப் சைனி, முகேஷ் குமார்.

Mohamed:

This website uses cookies.