சஞ்சு சாம்சன் வேண்டாம், ஒருநாள் தொடருக்கான விக்கெட் கீப்பராக இந்த வீரரை தேர்வு செய்யுங்கள்; இந்திய அணிக்கு கோரிக்கை வைத்த முன்னாள் வீரர் !!

சஞ்சு சாம்சன் வேண்டாம், ஒருநாள் தொடருக்கான விக்கெட் கீப்பராக இந்த வீரரை தேர்வு செய்யுங்கள்; இந்திய அணிக்கு கோரிக்கை வைத்த முன்னாள் வீரர்..

கே.எல் ராகுலுக்கு பதில் இந்த வீரரை விக்கெட் கீப்பர் பேட்ஸ்மெனாக விளையாட வையுங்கள் என இந்திய அணியின் முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்சரேக்கர் தெரிவித்துள்ளார்.

கடந்த வருட டிசம்பர் மாதம் ஏற்பட்ட விபத்தின் காரணமாக முற்றிலுமாக ஓய்வில் இருக்கும் இந்திய அணியின் நட்சத்திர விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், சர்வதேச போட்டியில் பங்கேற்று விளையாட இன்னும் சில மாதங்கள் ஆகும் என்பதால் தற்போதைய இந்திய அணி திறமையான விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் இல்லாமல் தடுமாறுகிறது.

ரிஷப் பன்டிர்க்கு பதில் கே.எல் ராகுல் லிமிடெட் ஓவர் போட்டிகளில் ரெகுலர் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மெனாக பங்காற்றிய போது,மோசமான பார்ம் மற்றும் காயம், அறுவை சிகிச்சை என்பதால் அவராலும் சர்வதேச போட்டிகளில் பங்கேற்று விளையாட முடியவில்லை.இதனால் யாரை ஒருநாள் போட்டிகளில் இந்தியா அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக நியமிக்கலாம் என்ற குழப்பத்தில் இந்திய அணி நிர்வாகம் தவித்து வருகிறது.

இதனால் இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் வல்லுனர்களால் யாரை ஒருநாள் தொடருக்கான விக்கெட் கீப்பர் பேட்ஸ்மெனாக நியமிக்கலாம் என்று இந்திய அணிக்கு அறிவுரை கொடுத்து வருகின்றனர்.

அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் வீரரும் பிரபல கிரிக்கெட் விமர்சகருமான சஞ்சய் மஞ்சரேக்கர்., ஒரு நாள் போட்டியில் கே.எல் ராகுலுக்கு பதில் சரியான தேர்வாக இருப்பார் என செய்தியாளர்கள் சந்திப்பின் வாயிலாக இந்திய அணிக்கு அறிவுரை கொடுத்துள்ளார்.

 

இது குறித்து அவர் தெரிவிக்கையில்., “இந்திய அணியில் மிடில் ஆர்டரில் ஒரு இடது கை பேட்ஸ்மனை கொண்டு வர வேண்டும், இதனால் இஷான் கிஷனை தேர்வு செய்வது மிக சிறப்பாக இருக்கும். அவர் துவக்க வீரர் என்பதை எனக்கு தெரியும், ஆனால் அவரால் லோயர் ஆர்டரிலும் சிறப்பாக செயல்பட முடியும். வங்கதேச அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இரட்டை சதம் அடித்ததற்கு பிறகு அவருக்கு இந்திய அணியில் அதிகமாகவாய்ப்பு கிடைக்காதது சற்று வருத்தம் தான். ஒரு நாள் தொடரில் கே.எல் ராகுலை ஐந்து அல்லது ஆறாவது இடத்தில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மனாக களம் இறங்குவதை நான் மிகவும் விரும்புகிறேன். ஆனால் அவர் உடல் தகுதியுடன் இல்லாததன் காரணமாக அவருக்கு பதில் இஷான் கிஷனை களம் இறக்கலாம்” என்று சஞ்சய் மஞ்சரேக்கர் தெரிவித்திருந்தார்.

Mohamed Ashique:

This website uses cookies.