ரோஹித் சர்மா வேண்டாம்… இந்த பையனுக்கு வாய்ப்பு கொடுங்க; நான்காவது  ஆடும் லெவனை தேர்வு செய்த முன்னாள் வீரர் !!

இந்திய அணியின் முன்னாள் வீரரான ஆகாஷ் சோப்ரா இந்தியா விண்டீஸ் இடையேயான நான்காவது டி.20 போட்டிக்கான அவரது இந்திய அணியின் ஆடும் லெவனை தேர்வு செய்துள்ளார்.

வெஸ்ட் இண்டீஸிற்கு சுற்றுப்பயண மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, விண்டீஸ் அணியுடன் ஐந்து டி.20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

இந்த தொடரின் முதல் மூன்று போட்டிகள் முடிவில் இந்திய அணி இரண்டு போட்டியிலும், விண்டீஸ் அணி ஒரு போட்டியிலும் வெற்றி பெற்றுள்ள நிலையில், இரு அணிகள் இடையேயான நான்காவது டி.20 போட்டி 6ம் தேதியும், ஐந்தாவது போட்டி 7ம் தேதியும் அமெரிக்காவின் ப்ளோரிடா மைதானத்தில் நடைபெற உள்ளன.

நான்காவது டி.20 இரு அணிகளுக்குமே முக்கியமான போட்டி என்பதால், இந்த போட்டி மீது அதிக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. முன்னாள் வீரர்கள் பலர் இந்த போட்டி குறித்தான தங்களது கருத்துக்களையும், கணிப்புகளையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.

அந்தவகையில், இந்தியா விண்டீஸ் இடையேயான நான்காவது டி.20 போட்டி குறித்து பல்வேறு விசயங்கள் பேசிய முன்னாள் இந்திய வீரரான ஆகாஷ் சோப்ரா, நான்காவது டி.20 போட்டிக்கான அவரது இந்திய அணியின் ஆடும் லெவனையும் தேர்வு செய்து அறிவித்துள்ளார்.

கடந்த போட்டியின் போது காயமடைந்த ரோஹித் சர்மாவிற்கு எஞ்சியுள்ள இரண்டு போட்டிகளில் இருந்தும் ஓய்வு கொடுக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தியுள்ள ஆகாஷ் சோப்ரா, துவக்க வீரராக சூர்யகுமார் யாதவுடன் இஷான் கிஷனிற்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

மிடில் ஆர்டரில் ஸ்ரேயஸ் ஐயர், ரிஷப் பண்ட் மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகியோருக்கு இடம் கிடைக்கும் என தெரிவித்துள்ள ஆகாஷ் சோப்ரா, ஆல் ரவுண்டர்களாக ஹர்திக் பாண்டியாவிற்கு, ரவீந்திர ஜடேஜா அல்லது தீபக் ஹூடா ஆகிய இருவரில் ஒருவருக்கும் கிடைக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

பந்துவீச்சாளர்கள் வரிசையில் புவனேஷ்வர் குமார், ரவி பிஸ்னோய் மற்றும் அர்ஸ்தீப் சிங் ஆகியோருக்கு ஆடும் லெவனில் இடம் கிடைக்கும் என தெரிவித்துள்ளார்.

ஆகாஷ் சோப்ரா தேர்வு செய்துள்ள ஆடும் லெவன்;

சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், ஸ்ரேயஸ் ஐயர், ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக், ரவீந்திர ஜடேஜா/தீபக் ஹூடா, ரவிச்சந்திர அஸ்வின், புவனேஷ்வர் குமார், ரவி பிஸ்னோய், அர்ஸ்தீப் சிங்.

Mohamed:

This website uses cookies.