வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் பிட்சை டேமேஜ் பண்ணாங்க.. அப்போது ரோகித் சர்மா என்கிட்ட இதைத்தான் பண்ண சொன்னாரு! – ஓப்பனாக பேசிய சிராஜ்

வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான இரண்டாவது டெஸ்டில் விண்டீஸ் வீரர்கள் செய்த செயல் மற்றும் அதற்கு ரோகித் சர்மா தன்னிடம் என்ன செய்ய சொன்னார் என்பது குறித்து பேசியுள்ளார் ஆட்டநாயகன் சிராஜ்.

வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் மேற்கொண்டு முதற்கட்டமாக இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி விளையாடி முடித்திருக்கிறது. அதில் முதல் டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 141 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.

குயின்ஸ் பார்க் மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸ் முடிவில் 364 ரன்கள் அடித்திருந்தது. இலக்கை துரத்திய வெஸ்ட் இண்டீஸ் அணி 76 ரன்களுக்கு இரண்டு விக்கெட்டுகளை இழந்து நான்காவது நாள் முடிவில் 289 ரன்கள் அடிக்க வேண்டிய நிலையிலும் இருந்தது.

ஐந்தாம் நாள் ஆட்டம் துவங்குவதற்கு முன்பிருந்தே மழை தொடர்ந்து பெய்து வந்தது. நாள் முடியும் வரை மழை நிற்காததால் போட்டி டிராவில் முடிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுவிட்டது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகளில் இரு அணிகளும் தலா நான்கு புள்ளிகளை பகிர்ந்து கொண்டன. முதல் இன்னிங்சில் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்திய முகமது சிராஜ் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

ஆட்டநாயகன் விருதை பெற்றபோது சிராஜ் பேசியதாவது:

“டெஸ்ட் கிரிக்கெட்டில் நான் பெரும் முதல் ஆட்டநாயகன் விருது இதுவாகும். நாளுக்கு நாள் மைதானத்திற்கு மைதானம் எப்படி பந்துவீச வேண்டும். அவற்றின் கண்டிஷனை எந்த அளவிற்கு விரைவாக புரிந்து கொள்ள வேண்டும் என்கிற அனுபவத்தை பெற்று வருகிறேன்.

இந்த டெஸ்ட் போட்டியின் போது மைதானம் வேகப்பந்துவீச்சிருக்கு சிக்கலாகவே இருந்தது. மேலும் வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சாளர்கள் வீசுகையில் எளிதாக பிட்ச் உடைந்து விட்டது. ஆகையால் எனக்கு பந்து வீசுவதற்கு மேலும் கடினமாகவே இருந்தது.

இதுகுறித்து நான் ரோகித் சர்மாவிடம் வினவியபோது எனக்கு தொடர்ந்து ஆறுதல் கொடுத்து சுதந்திரமாக பந்துவீசுவதற்கு இடம் கொடுத்தார். இதனால் எந்தவித அழுத்தமும் இன்றி பந்துவீச முடிந்தது.” என்று சிராஜ் பேசினார்.

Mohamed:

This website uses cookies.