இந்திய அணியின் இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பன்ட் ‘அவுட் சைட் தி ஆப் ஸ்டம்ப்’ (OUT SIDE THE OFF STUMP)பந்தை விளையாடுவதற்கு சிரமப்படுகிறார் என்று டேனிஷ் கனரியா தெரிவித்துள்ளார்.
சமகால கிரிக்கெட் தொடரின் தலைசிறந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மனாக வளம் வரும் இந்திய அணியின் இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பன்ட் இந்திய அணிக்காக பலமுறை சிறப்பாக செயல்பட்டு பல வெற்றிகளை பெற்றுக் கொடுத்துள்ளார்.
சரியான சாட் செலக்சன் இல்லாமல் தன்னுடைய விக்கெட்டை இழந்து விடுகிறார் என்று ஒருபக்கம் விமர்சிக்கபட்டாலும், இந்திய அணி நெருக்கடியான நேரத்தில் இருக்கும் பொழுது தன்னுடைய சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணியை சரிவிலிருந்து மீட்டு வெற்றி பாதையை நோக்கி அழைத்துச் செல்லும் திறமையான வீரராகவும் வலம் வருகிறார்.
இவர் இல்லாமல் இந்திய அணியை தற்போது கட்டமைக்க முடியாது என்று பாராட்டும் அளவிற்கு இவர் இந்திய அணியில் முக்கியத்துவமான வீரராக திகழ்ந்து வருகிறார்.
இது ஒருபுறம் இருந்தாலும் இவர் பேட்டிங்கில் செய்யும் தவறையும் சில தவறான முடிவுகளையும் அனுபவம் வாய்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் வல்லுனர்கள் சுட்டிக்காட்டி மிகச்சிறந்த வீரராக உருவாவதற்கு உதவியாக அறிவுரைகளை கூறி வருகின்றனர்.
அந்த வகையில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் ரிஷப் பண்ட் செய்த தவறையும் அவர் எதற்காக பேட்டிங்கில் சிரமப்படுகிறார் என்பதையும் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் டேனிஷ் கனரியா செய்தியாளர்கள் சந்திப்பின் வாயிலாக தெரியப்படுத்தியுள்ளார்.
இது குறித்து டேனிஷ் கனரியா தெரிவித்ததாவது, “ரிஷப் பண்ட் தொடர்ச்சியாக அவுட்சைட் தி ஆப் ஸ்டம்ப்பில் வீசும் பந்தை எதிர்கொள்வதில் சிரமப் படுகிறார்.இதை நன்றாக கவனித்த வெஸ்ட் இண்டீஸ் அணி பந்து வீச்சாளர் கீமோ பவுல் தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டார். ரிஷப் பண்ட் தன்னுடைய ஆர்க்கில் பந்து இருந்தால் அதை சிக்ஸராக மாற்றி விடுகிறார். ஆனால் அவர் ஷார்ட் 3rdமேன் திசையில் அடிக்க முயற்சிக்கும் பந்தில் சற்று கவனம் செலுத்த வேண்டும், அதுதான் இவருக்கு பிரச்சனையாக உள்ளது,மேலும் என்னை பொறுத்தவரையில் ரிஷப் பண்ட் டி20 போட்டிகளில் லோயர் ஆர்டரில் விளையாடினால் தான் நன்றாக இருக்கும் என்று டேனிஷ் கனரியா தெரிவித்திருந்தார்.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் ரிஷப் 12 பந்துகளில் 14 ரன்கள் எடுத்த நிலையில் கீமோ பவுல் பந்தில் தன்னுடைய விக்கெட்டை இழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.