ஹர்திக் பாண்டியாவிற்கு பதிலாக வெங்கடேஷ் ஐயருக்கு இடம் கொடுப்பதற்கு இது தான் காரணம்; வெளியானது தகவல் !!

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான லிமிடெட் ஓவர் போட்டியில் ஏன் ஹர்திக் பாண்டியாவிற்க்கு ஏன் இடம் கிடைக்கவில்லை என்பது குறித்து ஆய்வாளர்கள் குழு தெரிவித்துள்ளது.

தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிரான தொடரில் மிக மோசமான தோல்வியை சந்தித்த இந்திய கிரிக்கெட் அணி, அடுத்ததாக வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் பங்கேற்க உள்ளது.

இந்தியா வரும் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் மூன்று டி.20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க உள்ளது.

இதில் முதலில் நடைபெறும் டி.20 தொடரின் முதல் போட்டி பிப்ரவரி 6ம் தேதி நடைபெற உள்ளது. இதனைதொடர்ந்து நடைபெறும் ஒருநாள் தொடரின் முதல் போட்டி பிப்ரவரி 16ம் தேதி நடைபெற உள்ளது.



இந்தநிலையில், வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான ஒருநாள் மற்றும் டி20 தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ., அறிவித்துள்ளது.

காயம் காரணமாக தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிரான தொடரில் பங்கேற்காத கேப்டன் ரோஹித் சர்மா, தற்போது காயத்தில் இருந்து முழுமையாக குணமடைந்துவிட்டதால் விண்டீஸ் அணிக்கு எதிரான தொடரை ரோஹித் சர்மாவே வழிநடத்த உள்ளார்.

மேலும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இந்த லிமிடெட் ஓவர் தொடரில் அதிகமான இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

நீண்ட நாள் ஓய்வுக்குப் பின் ஹர்திக் பாண்டியா வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் விளையாடுவார் என்று எதிர்பார்த்த நிலையில், இந்திய அணியின் தேர்வாளர்கள் குழு ஹார்திக் பாண்டியா உடற்தகுதியின் மேல் இன்னும் முழுமையான நம்பிக்கை வராததால் அவரை அணியில் இருந்து நீக்கி விட்டு பாண்டியாவிற்கு பதில் வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டராக வெங்கடேஷ் ஐயரை தேர்வு செய்துள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் ஹர்திக் பண்டியா உடற் தகுதியை சரி செய்துவிட்டு பேட்டிங் மற்றும் பந்து வீச்சு ஆகிய இரண்டிலும் அதிக பயிற்சியை மேற்கொள்ளுமாறும் இந்திய அணியின் தேர்வாளர்கள் குழு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2 ஆண்டுகளாக காயம் காரணமாக அவதிப்பட்டு வந்த ஹர்திக் பாண்டியா பந்துவீச முடியாமல் திணறி வந்தார், இருந்தபோதும் இவர் மீது நம்பிக்கை வைத்து நடந்து முடிந்த உலக கோப்பை தொடரில் இந்திய அணி ஹர்த்திக் பாண்டியாவிற்கு வாய்ப்பளித்தது ஆனால் அதை இவர் சரியாக பயன்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Mohamed:

This website uses cookies.