இதுல அசிங்கப்பட என்ன இருக்கு, ஒருநாள் தொடரில் நான் சுத்த வேஸ்ட் ; ஒருநாள் தொடர் குறித்த கேள்விக்கு நேர்மையாக பேசிய சூரியகுமார் யாதவ்..
டி20 தொடரின் தலைசிறந்த பேட்ஸ்மேன்கள் வரிசையில் முதலிடத்தை பிடித்திருக்கும் இந்திய அணியின் அதிரடி பேட்ஸ்மேன் சூரியகுமார் யாதவ், டி20 தொடரில் தனக்கே உரித்தான தனி இடத்தை பிடித்து அசத்தி வருகிறார். ஆனால் இவரால் டி20 தொடரில் விளையாடுவது போல் ஒரு நாள் தொடரில் விளையாட முடியவில்லை.
இதுவரை 49 டி20 போட்டிகளில் பங்கேற்று 1780 ரன்கள் அடித்து அசத்திய சூரியகுமார் யாதவ், ஒரு நாள் போட்டியில் மிக மோசமான ரெக்கார்டு வைத்துள்ளார். இவர் ஒரு நாள் போட்டிகளில் இதுவரை 24 போட்டிகளில் பங்கேற்று வெறும் 511 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார்.
குறிப்பாக இந்தியாவில் நடைபெற்ற ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரில் 3 போட்டிகளில் பங்கேற்று விளையாடிய சூரியகுமார் யாதவ் 3 போட்டிகளிலுமே டக்-அவுட்டாகி கடுமையான விமர்சனததிற்கு உள்ளானார்.இதனால் இவருக்கு உலகக்கோப்பை தொடரில் வாய்ப்பே கிடையாது என உலக கிரிக்கெட் வட்டத்தில் பேசப்பட்டு வருகிறது.
ஒருநாள் போட்டிகளில் என்னுடைய ரெக்கார்ட் ரொம்ப மோசம்….
இந்த நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 83 ரன்கள் அடித்த அசத்திய சூரியகுமார் யாதவ்., தன்னுடைய உலகக்கோப்பை தொடருக்கான வாய்ப்பு குறித்து போஸ்ட் மேட்ச் பர்செண்டேஷனில் வெளிப்படையாக பேசியுள்ளார்.
அதில்.,நாங்கள் அதிகமான டி.20 போட்டிகளில் பங்கேற்று விளையாடுகிறோம், எனவே டி.20 தொடர் எங்களுக்கு இயல்பான ஒன்றாக மாறிவிட்டது.ஆனால் நாங்கள் அதிகமான ஒருநாள் போட்டிகளில் விளையாடவில்லை எனவே ஒருநாள் தொடர் சற்று சவாலாகவே உள்ளது”.
“ஒருநாள் தொடரை பொறுத்தவரையில் சூழலுக்கு ஏற்றவாறு பேட்டிங் செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளது.உதாரணமாக ஒருநாள் போட்டியில் விக்கெட் விரைவாக வீழ்ந்துவிட்டால், நாம் மிடில் ஆர்டரில் டெஸ்ட் போட்டியில் விளையாடுவது போல் பொறுமையாக விளையாட வேண்டும்,போட்டியின் இறுதி கட்டத்தை நெருங்கும்போது டி.20 தொடரில் விளையாடுவது போல் விளையாட வேண்டும்”.
“ஒருநாள் தொடரை பொறுத்தவரையில் அணி நிர்வாகம் என்ன முடிவு எடுத்தாலும் ஏற்றுக்கொள்வேன்.மேலும் ஒருநாள் தொடரில் சிறப்பாக செயல்பட உரிய கால அவகாசத்தை பயன்படுத்துவேன்.நான் ஒருநாள் போட்டியில் மிக மோசமாக செயல்பட்டுள்ளேன்.இதை சொல்வதற்கு அசிங்கப்பட தேவையில்லை.இதில் நேர்மையாக இருப்பது அவசியம்.அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவும்,அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டும் என்னிடம் நீ அதிக ஒருநாள் போட்டியில் விளையாடவில்லை, அதைப் பற்றி நீ சிந்திக்க வேண்டும் ஒருநாள் போட்டியில் நீ 45-50 பந்துகளை எதிர்கொண்டு சூழலுக்கு ஏற்றவாறு விளையாட வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம்” என்று சூரியகுமார் யாதவ் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.