இந்திய டி20 அணியில் இனி சீனியர் வீரர்களுக்கு இடம் இல்லை என்று திட்டவட்டமாக தெரிவித்திருக்கிறார் தேர்வுக்குழுவின் புதிய தலைவராக பொறுப்பேற்ற அஜித் அகர்கர்.
இந்திய அணி இங்கிலாந்துக்கு சற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு டெஸ்ட் போட்டிகள், மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் ஐந்து டி20 போட்டிகளில் விளையாடுகிறது. ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணி இரண்டு வாரங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டுவிட்டது.
டி20 போட்டிகளுக்கான அணி மீதம் இருந்த நிலையில், புதிதாக தேர்வுக்குழு தலைவர் பொறுப்பேற்ற அஜித் அகர்கர் இதற்கான முடிவுகளை எடுப்பார் என்கிறவாறு தகவல்கள் வந்தது. இவர் பொறுப்பேற்ற இரு தினங்களிலேயே வெஸ்ட் இண்டீஸ் சென்று விளையாடும் டி20 போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதில் இளம் வீரர்கள் சிலருக்கு வாய்ப்புகள் கொடுக்கப்பட்டிருக்கிறது.
ஐபிஎல் தொடரில் அபாரமாக செயல்பட்ட விராட் கோலி டி20 போட்டிகளில் இம்முறையும் எடுக்கப்படவில்லை. ரோகித் சர்மாவிற்கு இனி நிரந்தரமாகவே இடமில்லை என்பதும் தெரிகிறது.
இந்த வருடம் 50 ஓவர் உலகக்கோப்பை நடப்பதால் சீனியர் வீரர்கள் அதில் கவனம் செலுத்த வேண்டும் எனும் நோக்கில், இதுவரை சீனியர் வீரர்கள் டி20க்கு எடுக்கப்படாமல் இருந்தனர் என்று கருதப்பட்டது. தேர்வுக்குழுவின் புதிய தலைவராக பொறுப்பேற்ற அஜித் அகர்கர், இளம் மற்றும் சீனியர் வீரர்கள் கொண்ட கலவையாக டி20 அணியை தேர்வு செய்வார் என்கிற பேச்சுக்களும் அடிபட்டன.
இந்நிலையில் துவக்க வீரர்கள் மற்றும் மிடில் ஆர்டரில் இளம் வீரர்களே தேர்வு செய்து முற்றிலுமாக சீனியர் வீரர்களுக்கு இடம் இல்லை என்று சூசகமாக தெரிவித்திருக்கிறார் அஜித் அகர்கர்.
ஓப்பனிங்கில் விளையாடுவதற்கு இஷான் கிஷன், சுப்மன் கில் மற்றும் யஷஷ்வி ஜெய்ஸ்வால் ஆகியோர் இருக்கின்றனர். மிடில் ஆர்டரில் விளையாடுவதற்கு சூரியகுமார் யாதவ், சஞ்சு சாம்சன், திலக் வர்மா ஆகியோர் இருக்கின்றனர்.
ஜெய்ஸ்வால், திலக் வர்மா, இஷான் கிஷன் என வரிசையாக இளம் பட்டாளத்திற்கு வாய்ப்புகள் கொடுக்கப்பட்டுள்ளதால், இனி டி20 போட்டிகளில் விராட் கோலி, ரோகித் சர்மா போன்ற சீனியர் வீரர்களுக்கு கதவுகள் மூடப்பட்டு விட்டன என்பது உறுதியாகிவிட்டது.