விண்டீஸ் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்றுள்ள இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
இந்தியா வந்துள்ள விண்டீஸ் கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் மூன்று டி.20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.
இதில் முதலில் நடைபெறும் ஒருநாள் தொடரின் முதல் போட்டி அஹமதாபாத்தில் இன்று நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்றுள்ள இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.
இந்த போட்டியானது இந்திய அணிக்கு 1000வது சர்வதேச ஒருநாள் போட்டியாகும். புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள ரோஹித் சர்மா வரலாற்று சிறப்புமிக்க இந்த போட்டியில் இருந்து தனது கேப்டன்சியை துவங்குகிறார்.
விண்டீஸ் அணிக்கு எதிரான இந்த போட்டி வரலாற்று சிறப்புமிக்கது என்றாலும், இந்த போட்டியில் இந்திய வீரர்கள் கையில் கருப்பு நிற பட்டையுடன் விளையாடி வருகின்றனர். இன்று இயற்கை எய்திய பிரபல பிண்ணனி பாடகி லதா மஞ்கேஷ்கருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இந்திய வீரர்கள் தங்களது கைகளில் கருப்பு நிற பேட்ஜ் அணிந்துள்ளனர்.
அதே போல் இந்த போட்டிக்கான இந்திய அணியில் தீபக் ஹூடா, இஷான் கிஷன், முகமது சிராஜ், வாசிங்டன் சுந்தர், பிரசீத் கிருஷ்ணா போன்ற வீரர்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.
முதல் ஒருநாள் போட்டிக்கான இந்திய அணி;
ரோஹித் சர்மா, இஷான் கிஷன், விராட் கோலி, ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, வாசிங்டன் சுந்தர், ஷர்துல் தாகூர், யுஸ்வேந்திர சாஹல், பிரசீத் கிருஷ்ணா, முகமது சிராஜ்.