இரண்டு புதிய வீரர்கள் மற்றும் புதிய கேப்டன் உடன் இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரை விளையாடுகிறது வெஸ்ட் இண்டீஸ் அணி. 13 பேர் கொண்ட டெஸ்ட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் மேற்கொண்டு முதற்கட்டமாக இரண்டு டெஸ்ட் போட்டிகள், அடுத்ததாக மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் கடைசியாக 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி விளையாடுகிறது. 3 விதமான போட்டிகளுக்குமான இந்திய அணி அறிவிக்கப்பட்டுவிட்டது.
உலகக்கோப்பை குவாலிஃபயர் சுற்றில் துரதிஷ்டவசமாக தோல்வியை தழுவி உலககோப்பைக்கு முதன்முறையாக தகுதி பெறாமல் வெளியேறிய வெஸ்ட் இண்டீஸ் அணி, அதிலிருந்து மீண்டு வந்து முதல் டெஸ்ட் போட்டிக்கான 13 பேர் கொண்ட அணியை அறிவித்துள்ளது.
இந்த டெஸ்ட் அணியின் கேப்டன் பொறுப்பை ஏற்கிறார் கிரேய்க் பிராத்வேய்ட் ஏற்கிறார். முதன்முறையாக டெஸ்ட் அணிக்கு இவர் கேப்டனாகிறார். கிர்க் மேக்கன்சி, ஆலிக் அத்தனஸ் இருவரும் முதன்முறையாக டெஸ்ட் அணியில் எடுக்கப்பட்டுள்ளார்கள்.
சுழற்பந்துவீச்சு ஆல்ரவுண்டர் ரகீம் கார்ன்வெல் மீண்டும் டெஸ்ட் அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார். இவர் 2019ஆம் ஆண்டு இந்திய அணிக்கு எதிரான தொடரில் அறிமுகமானார். தொடர்ந்து விளையாடிவந்த இவரை கடந்த சில தொடர்களாக எடுக்கவில்லை. உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக ஆட்டத்தை வெளிப்படுத்தி தற்போது மீண்டும் அணிக்குள் வந்திருக்கிறார்.
டெஸ்ட் போட்டிகளுக்கான மேற்கிந்திய தீவுகள் அணி:
கிரேக் பிராத்வைட் (கேப்டன்), அலிக் அதானாஸ், டேகனரைன் சந்தர்பால், ரஹ்கீம் கார்ன்வால், ஜெர்மைன் பிளாக்வுட் (துணைகேப்டன்), ஷானன் கேப்ரியல், ஜேசன் ஹோல்டர், அல்சாரி ஜோசப், கிர்க் மெக்கென்சி, ஜோசுவா டா சில்வா, ரேய்மெல் ரீஃபார், ரேய்மெல் ரீஃபர், கேமர் ரோச்.
ரிசர்வ் வீரர்கள்: டெவின் இம்லாச், அகீம் ஜோர்டான்.
டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணி
ரோஹித் சர்மா (கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட், விராட் கோலி, ஷுப்மான் கில், அஜிங்க்யா ரஹானே (துணைகேப்டன்), கேஎஸ் பாரத், யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரவிச்சந்திரன் அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, இஷான் கிஷான், அக்சர் படேல், முகமது. சிராஜ், ஷர்துல் தாக்கூர், ஜெய்தேவ் உனட்கட், முகேஷ் குமார், நவ்தீப் சைனி.