இந்திய அணிக்குள் காலடி எடுத்து வைத்ததும் சம்பவம்… சச்சின், கில் சாதனைகளை அறிமுக போட்டியில் காலி செய்த ஜெய்ஸ்வால்!

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான தருணமே சச்சின் மற்றும் சுப்மன் கில் ஆகியோரின் முதல்தர ரெக்கார்டை முறியடித்துள்ளார் யஷஷ்வி ஜெய்ஸ்வால்.

இளம்வீரர் யஷஷ்வி ஜெய்ஸ்வால் உள்ளூர் கிரிக்கெட்டில் மும்பை அணிக்காக அபாரமாக விளையாடினார். அதன் பிறகு ஐபிஎல் தொடரிலும் 14 போட்டிகளில் 625 ரன்கள் குவித்து, ஒரு சதம் மற்றும் ஐந்து அரைசதங்கள் அடித்தார். இவரது சராசரி கிட்டத்தட்ட 50 ஆகும்.

உள்ளூர் கிரிக்கெட் மற்றும் ஐபிஎல் கிரிக்கெட்டில் மிகச்சிறப்பாக செயல்பட்ட காரணத்திற்காக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு செல்லும் இந்திய அணியில் எடுக்கப்பட்டார். ஆனால் பிளேயிங் லெவனில் விளையாட வைக்கப்படவில்லை.

அதைத்தொடர்ந்து நடைபெற்று வரும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் முன்னதாக எடுக்கப்பட்டார். பின்னர் டி20 தொடருக்கும் வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது.

வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் டெஸ்டின் முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்து 150 ரன்கள் மட்டுமே அடித்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதைத்தொடர்ந்து பேட்டிங் இறங்கிய இந்திய அணிக்கு ஜெய்ஸ்வால் மற்றும் ரோகித் சர்மா இருவரும் துவக்க வீரர்களாக களமிறங்கினர்.

வழக்கமாக ஓப்பனிங் செய்யும் கில் தான் நம்பர் 3 இடத்தில் களம் இறங்குவதாக பயிற்சியாளர் ராகுல் டிராவிட் இடம் தெரிவித்தார். ஆகையால் ஜெய்ஸ்வால் ஓப்பனிங் இறங்குவதற்கு வாய்ப்பு கிடைத்தது.

இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்ட ஜெய்ஸ்வால் அரைசதம் கடந்தார். அதை அப்படியே சதமாகவும் மாற்றி விளையாடி வருகிறார். இரண்டாம் நாள் முடிவில் 143 ரன்கள் உடன் களத்தில் நிற்கிறார். இவருக்கு பக்கபலமாக இருந்த ரோகித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட்டில் பத்தாவது சதம் அடித்து 103 ரன்களுக்கு ஆட்டம் இழந்தார்.

ஜெய்ஸ்வால் இந்திய டெஸ்ட் அணிக்கு அறிமுகமாவதற்கு முன்பு முதல்தர டெஸ்ட் கிரிக்கெட்டில் அபாரமாக செயல்பட்டு 15 போட்டிகளில் 80.21 சராசரி வைத்துள்ளார். சச்சின் டெண்டுல்கர் இந்திய அணிக்கு அறிமுகமாவதற்கு முன்பு 9 உள்ளூர் டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 70.18 சராசரி வைத்திருக்கிறார். சுப்மன் கில் 23 உள்ளூர் போட்டிகளில் 68.78 சராசரி வைத்திருக்கிறார். இவர்களின் ரெக்கார்டை ஜெய்ஸ்வால் உடைத்துள்ளார்.

ஜெய்ஸ்வால் விட 2 பேர் அதிக முதல்தர டெஸ்ட் சராசரியுடன் இந்திய அணிக்கு வந்திருக்கின்றனர். அவர்களில் முதலிடத்தில் இருக்கும் வினோத் காம்ளி 27 போட்டிகளில் 88.37 சராசரி வைத்திருந்தார். பிரவின் ஆம்ரே 23 போட்டிகளில் 81.23 சராசரி வைத்திருந்தார்.

Mohamed:

This website uses cookies.