ஓய்வு கேட்டாரா அல்லது ஓய்வு கட்டாயம் எடுக்கணும்னு சொல்லப்பட்டதா .. விராட் கோலியின் நீக்கம் குறித்து சந்தேகத்தை ஏற்படுத்திய முன்னாள் வீரர் !!

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் விராட் கோலி ஓய்வு வேண்டுமென்று கேட்டாரா… அல்லது நீங்களே ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள் என்று சொல்லப்பட்டதா.. என்பது தெரியவில்லை என்று ஆகாஷ் சோப்ரா கேள்வி எழுப்பியுள்ளார்.

கடந்த இரண்டு வருடமாகவே மோசமான பார்மால் அவதிப்பட்டு வரும் விராட் கோலி எந்த ஒரு போட்டியிலும் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு விளையாடவில்லை.

அடுத்த போட்டியில் சிறப்பாக செயல்படுவார்.. அதற்கடுத்த போட்டியில் சிறப்பாக செயல்படுவார்.. என்று அவர் மீது வைத்த நம்பிக்கை எல்லாம் வீணடிக்கும் வகையில் இவருடைய பேட்டிங் மிக மோசமாக இருக்கிறது.

நடைபெற்றுக் கொண்டிருக்கும் இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரிலும் இதே நிலைமைதான் அரங்கேறிக் கொண்டிருக்கிறது.

இதன் காரணமாக இவரை வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான லிமிடெட் ஓவர் தொடரில் இந்திய அணி நீக்கியுள்ளது.

இந்த நிலையில் விராட் கோலியின் நீக்கம் கிரிக்கெட் வட்டாரத்தில் பேசுபொருளாக உள்ளது,அந்த வகையில் பிரபல கிரிக்கெட் விமர்சகர் ஆகாஷ் சோப்ரா விராட் கோலியின் நீக்கம் எப்படி நிகழ்ந்துள்ளது என்பதை வெளிப்படையாக பேசியுள்ளார்.

இதுகுறித்து ஆகாஷ் சோப்ரா பேசுகையில்,“ ஒரு நாள் தொடரில் விராட் கோலியை எடுத்துவிட்டு டி20 தொடரில் எடுக்கவில்லை என்றால் அந்த சமயம் விராட் கோலியின் காயம் குறித்த சந்தேகம் நம்மிடம் வாதமாக ஏற்படும், ஆனால் தற்பொழுது விராட் கோலி ஒட்டுமொத்த தொடரிலேயே இடம்பெறவில்லை அவர் இரண்டாவது ஒருநாள் போட்டியில் விளையாடிய பொழுதும் அவருடைய பெயர் இடம்பெறாமல் போனது வேறு விதமான கேள்விகளை எழுப்புகிறது, அவர் தானாக ஓய்வு பெறுகிறேன் என்று கேட்டாரா..? அல்லது ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள் என்று நிர்வாகம் மூலம் சொல்லப்பட்டதா..? வேறு ஏதும் காயமா அல்லது வேலை பளுவை குறைப்பதற்காகவா என்பது இன்னும் தெரியவில்லை. ஆனால் இந்த ஓய்வு நிரந்தரம் கிடையாது நிச்சயம் இந்த தொடருக்கு பின் விராட் கோலி சிறப்பாக செயல்படுவார் என்றும் ஆகாஷ் சோப்ரா பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

 

 

Mohamed:

This website uses cookies.