இந்தியா ஏ அணிக்கெதிராக வெஸ்ட் இண்டீஸ் ஏ 302 ரன்கள் எடுத்து ஆல்அவுட்

அதன்பின் வந்த கேப்டன் ப்ரூக்ஸ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் சதம் அடிக்க வெஸ்ட் இண்டீஸ் ‘ஏ’ அணி நேற்றைய முதல்நாள் ஆட்ட முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 301 ரன்கள் எடுத்திருந்தது. ப்ரூக்ஸ் 121 ரன்னுடனும், ஓ தாமஸ் 2 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. ஆட்டம் தொடங்கிய ஐந்தாவது பந்தில் தாமஸ் ஆட்டமிழந்தார். இதனால் வெஸ்ட் இண்டீஸ் ‘ஏ’ 90.5 ஓவரில் 302 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. ப்ரூக்ஸ் 122 ரன்கள் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்திய அணி சார்பில் முகமது சிராஜ் 22.5 ஓவர்கள் வீசி 68 ரன்கள் விட்டுக்கொடுத்து நான்கு விக்கெட்டுக்கள் கைப்பற்றினார். சுழற்பந்து வீச்சாளர் நதீம் 3 விக்கெட் வீழ்த்தினார். பின்னர் இந்தியா ‘ஏ’ அணி முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்து வருகிறது.

Editor:

This website uses cookies.