ஆஸ்திரேலிய அணியுடனான டெஸ்ட் தொடரில் ஒரு போட்டியில் தான் கோஹ்லி விளையாடுவார் என பிசிசிஐ அறிவித்தது சமூக வலைதளங்களில் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கும் இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலிய அணியும், மூன்று டி.20 போட்டிகள், மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க உள்ளது.
இந்த தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்தத போது, அதில் ரோஹித் சர்மாவின் பெயர் இல்லை, இது சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையானதை தொடர்ந்து கடந்த இரு தினங்களுக்கு முன்பு பிசிசிஐ வெளியிட்ட புதிய அறிவிப்பில் ரோஹித் சர்மா டெஸ்ட் அணியில் சேர்க்கப்படுவதாகவும், ஆனால் விராட் கோஹ்லி முதல் டெஸ்ட் போட்டிக்கு பிறகு இந்தியா திரும்புவார் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.
பிசிசிஐ நிர்வாகிகள் பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி குடும்ப விஷயமாக முதல் டெஸ்டில் மட்டும் பங்கு எடுத்துக் கொள்வார் பின் மற்ற டெஸ்ட் போட்டிகளில் கலந்து கொள்ள மாட்டார் என்றும் தெரிவித்துள்ளது.இதானால் ரோஹித் சர்மா அணியில் மீண்டும் இடம் பிடித்தார்.
பாலிவுட் நடிகையும் மற்றும் விராட் கோலியின் மனைவியுமான அனுஷ்கா சர்மா குழந்தை பிறக்கவுள்ளதால். விராட் கோலி தனது குழந்தையை பார்ப்பதற்காகவே அடிலெய்டு டெஸ்டில் இருந்து விலகிக்கொண்டு தன் மனைவியையும் குழந்தையும் பார்க்கச் செல்கிறார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுபற்றி நெட்டிசன்கள் பலரும் தங்களது கருத்தை தெரிவித்து வருகின்றனர். அதில் குறிப்பாக கடந்த 2015ம் ஆண்டு நடைபெற்ற ஆஸ்திரேலிய தொடரின் போது அப்போதைய கேப்டனான தோனியின் மனைவி கர்பமாக இருந்ததையும், ஆனால் தனது குடும்பத்தை நாட்டிற்காக விளையாடுவதே முக்கியம் என அந்த தொடர் முழுவதும் விளையாடி கொடுத்ததையும் மேற்கோள் காட்டி கோஹ்லியை ரசிகர்கள் வச்சு செய்து வருகின்றனர்.
இந்த செய்தியை விராட் கோலியுடன் ஒப்பிட்டு நெட்டிசன்கள் பலர் கேள்வி எழுப்பிய வண்ணம் உள்ளனர். ஆனால் இது ஒவ்வொரு மனிதனுடைய தனிப்பட்ட உரிமை என்று விராட் கோலிக்கு ஆதரவாக பலரும் தனது குரலை கொடுத்துள்ளனர்.
இதுபற்றி கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்ஷா போக்ளே தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்ததாவது, இது ஒரு மிகப்பெரிய செய்தியாகும் கோலி முதல் போட்டியில் இருந்து தனது குழந்தையை பார்ப்பதற்காக இந்தியா செல்கிறார். ஆனால் கோலி இல்லாத இந்திய அணி நிலைமை என்னவாக இருக்கும் என்று தனது பதிவை தெரிவித்திருந்தார்