முன்னாள் இந்திய அணி கேப்டன் மற்றும் தற்போதைய பிசிசிஐயின் தலைவருமான சௌரவ் கங்குலி இந்தியா டுடேக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது.தற்போது நடக்கவுள்ள ஆஸ்திரேலியாவுக்கு எதிரான சுற்றுப்பயணத்தில் இந்தியா பங்கேற்கவுள்ளது. வலிமையான இரு அணிகளும் மோதுவதால் இந்த போட்டி மிகவும் விறுவிறுப்பாக அமையும்.
ஆஸ்திரேலியாவுக்கு செல்ல உள்ள இந்திய அணி மிகவும் சிறப்பாக செயல்பட்டால் மட்டுமே வெற்றியைத் தர முடியும் என்று கூறினார். ஆஸ்திரேலியாவில் நடக்கும் போட்டியில் விராட் கோலி தலைமையில் பங்கேற்க்கும் இந்திய அணி 3 odi தொடர் 3 டி20 தொடர் மேலும் 4 டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளது.
கடந்த ஆண்டுகளில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் வென்ற இந்தியா அணி, சவுத் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்த் ஆகிய நாடுகளுக்கு எதிரான போட்டியில் பெரும் தோல்வி கண்டது.
இந்திய அணியின் பும்ரா மட்டுமே சிறப்பாக செயல்பட்டார். இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் எதிர்பார்த்த அளவுக்கு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. இதனால் இந்திய அணி படுதோல்வியை சந்தித்தது.
விராட் கோலியை பொருத்தவரை அவர் ஒரு சிறப்பான வீரர் அனைத்து நாடுகளும் எதிரான போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தனது அணியில் சிறப்பான முறையில் வழிநடத்திக் கொண்டிருக்கிறார். மேலும் வரும் போட்டிகளில் சிறப்பாக செயல்படும் பட்சத்தில் இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் வெற்றிபெற அதிகம் வாய்ப்பு உள்ளது.
கடந்தமுறை ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விராட் கோலி, புஜாரா மற்றும் ரிஷப் பண்ட் சிறப்பான ஆட்டத்தாலும், சிறந்த பந்துவீச்சாளும் இந்திய அணி வெற்றி பெற்றது.
ஆனால் அப்போட்டியில் டேவிட் வார்னர் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் தடையின் காரணமாக பங்கேற்கவில்லை. ஆனால் இம்முறை ஆஸ்திரேலிய அணி மிகவும் பலமான அணியாக திகழ்கிறது. டேவிட் வார்னர், ஸ்டீவ் ஸ்மித் போன்ற அனுபவம் வாய்ந்த வீரர்கள் இந்த போட்டி பங்கேற்க உள்ளன இது ஆஸ்திரேலியா அணிக்கு மிகவும் சாதகமான ஒன்றாகும். எனவே இந்திய அணி மிகச்சிறப்பாக செயல்படவேண்டும்.