இந்திய அணியால் முடியாது… டி.20 உலகக்கோப்பையை வெல்ல போவது இந்த அணி தான்; ரிக்கி பாண்டிங் உறுதி !!

எதிர்வரும் டி.20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் எந்த அணி சாம்பியன் பட்டம் வெல்லும் என்பது குறித்தான தனது கணிப்பை முன்னாள் ஆஸ்திரேலிய வீரரான ரிக்கி பாண்டிங் ஓபனாக வெளிப்படுத்தியுள்ளார்.

டி.20 போட்டிகளுக்கான சாம்பியனை தீர்மானிக்கும் டி.20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் துவங்க உள்ளது.

 

ஒவ்வொரு அணிகளுக்கும் கனவாக இருக்கும் உலகக்கோப்பையை வெல்ல அனைத்து அணிகளுமே கடுமையாக போராடும் என்பதால், டி.20 உலகக்கோப்பை தொடருக்காக ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களும் மிகுந்த ஆவலுடன் காத்துள்ளனர். ஒவ்வொரு அணிகளும் டி.20 உலகக்கோப்பைக்கான தங்களது அணியை தற்போதே தயார்படுத்தத துவங்கிவிட்டன.

டி.20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் துவங்க இன்னும் இரண்டு மாதங்களுக்கு மேல் இருந்தாலும், முன்னாள் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் வல்லுநர்கள் பலர் எதிர்வரும் டி.20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் குறித்தான தங்களது கருத்துக்களையும், கணிப்புகளையும் இப்போதே வெளிப்படுத்த துவங்கி விட்டனர்.

அந்தவகையில், எதிர்வரும் டி.20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் குறித்து பல்வேறு விசயங்கள் பேசி வரும் முன்னாள் ஆஸ்திரேலிய வீரரான ரிக்கி பாண்டிங், இந்த முறை எந்த எந்த அணிகள் இறுதி போட்டிக்கு முன்னேறும், அதில் எந்த அணி சாம்பியன் பட்டம் வெல்லும் என்பது குறித்தான தனது கணிப்பையும் ஓபனாக வெளிப்படுத்தியுள்ளார்.

இது குறித்து ரிக்கி பாண்டிங் பேசுகையில், “என்னை பொறுத்தவரையில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய இரு அணிகள் டி.20 உலகக்கோப்பை தொடரின் இறுதி போட்டிக்கு முன்னேறும். அதில் இந்திய அணியை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி சாம்பியன் பட்டத்தை வெல்லும் என கருதுகிறேன். டி.20 உலகக்கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெறுவதால், மற்ற அணிகளை விட நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலிய அணிக்கு இந்த தொடர் இலகுவானதாக இருக்கும். இங்கிலாந்து, பாகிஸ்தான் போன்ற அணிகள் சிறப்பாக விளையாடி வந்தாலும், டி.20 போட்டிகளில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளே வலுவானது” என்று தெரிவித்தார்.

Mohamed:

This website uses cookies.