அண்டர்-19 ஆசிய கோப்பை: இறுதிப்போட்டியில் புலிக்குட்டிகளை துவம்சம் செய்த இந்திய அணி!

ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் 5 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வங்காளதேசத்தை வீழ்த்தி கோப்பையை தட்டி சென்றது.

ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்குட்பட்டோர்) இலங்கையில் நடந்து வருகிறது. இதில் இந்தியா – வங்காளதேச அணிகள் இறுதி போட்டிக்கு முன்னேறியது. அதற்கான இறுதி போட்டி இன்று நடைபெற்றது.

இறுதி போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டதில் டாஸ் வென்று இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி சீரான இடைவேளியில் விக்கெட்டுகளை இழந்தது.

Left-arm spinner Atharva Ankolekar returned with a five-wicket haul to help India clinch the U-19 Asia Cup title with a thrilling five-run win over Bangladesh in a low-scoring final here on Saturday.

அதிக பட்சமாக கரண் லால் 37 ரன்களும் கேப்டன் துருவ் 33 ரன்களும் எடுத்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் வெளியேற இந்திய அணி 32.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து 106 ரன்கள் மட்டுமே எடுத்தது.

107 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் வங்காள தேசம் அணி களமிறங்கியது. அதர்வாவின் துல்லியமான பந்து வீச்சால் வங்களாதேச அணி 101 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 5 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

இந்திய அணி தரப்பில் அதர்வா 5 விக்கெட்டுகளும் ஆகாஷ் சிங் 3 விக்கெட்டுகளும் மிஸ்ரா, பட்டில் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

ஆட்ட நாயகனாக அதர்வா தேர்வு செய்யப்பட்டார். தொடர் நாயகனாக இந்திய அணியின் அர்ஜூன் அசாத் தேர்வு செய்யப்பட்டார்.

Shashwat Rawat (19) and skipper Jurel then steadied the ship and brought up the team fifty before the former was trapped leg-before by Hossain in the 15th over.

 

இதனையடுத்து 7-வது முறையாக ஆசிய கோப்பையை இந்திய அணி தட்டி சென்றது. ஆசிய கோப்பை வென்ற அணிகள் பின்வருமாறு:-

1989: இந்தியா
2003: இந்தியா
2012: இந்தியா & பாகிஸ்தான் (பகீர்ந்து கொண்டனர்)
2014: இந்தியா
2016: இந்தியா
2017: ஆப்கானிஸ்தான்
2018: இந்தியா
2019: இந்தியா

Sathish Kumar:

This website uses cookies.