இப்போது கிரிக்கெட் இல்லை.. அடுத்தடுத்த இரண்டு கிரிக்கெட் தொடர்கள் ரத்து – பிசிசிஐ திடீர் அறிவிப்பு!
இலங்கை மற்றும் ஜிம்பாப்வே இரண்டு அணிகளுடன் நடக்கவிருந்த கிரிக்கெட் தொடரை ரத்து செய்துள்ளது பிசிசிஐ. ஆகஸ்ட் மாதம் வைத்துக் கொள்ளலாம் என ஆலோசிப்பதாக தகவல்கள் வெளியாகின்றன.
உலகெங்கிலும் பரவி வரும் கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவில் தீவிரமடைந்துள்ளது. மார்ச் மாத இறுதியிலிருந்து எவ்வித கிரிக்கெட் போட்டிகளும் நடைபெறவில்லை. அனைத்து கிரிக்கெட் போட்டிகளும் காலவரையறை இன்றி தள்ளி வைக்கப்பட்டு இருக்கின்றன. இதனால் இரு வீரர்கள் வீட்டிலேயே முடங்கி கிடக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது.
இந்த இடைப்பட்ட காலத்தில் ரசிகர்கள் உடனான சந்திப்பு துண்டித்து விடாத வண்ணம் சமூக வலைதளங்களிலும் வாயிலாக நேரலையில் கிரிக்கெட் வீரர்கள் உரையாடி வருவதை வாடிக்கையாக கொண்டிருக்கின்றனர்.
இதற்கிடையில், இந்தியாவில் தற்போது நிபந்தனைகளுடன் கூடிய தளர்வுகள் அமல்படுத்தப்பட்டிருப்பதால் கிரிக்கெட் வீரர்கள் பயிற்சிக்குச் செல்லலாம் என மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. இருப்பினும், வீரர்கள் பலர் சென்னை, மும்பை, டெல்லி போன்ற கொரோனா வைரஸ் அதிகமான அளவில் பரவி வரும் இடங்களில் இருப்பதால் வெளியில் வருவதற்கு பதற்றம் தெரிவித்திருக்கின்றனர். இதனால் இந்தியாவில் இன்னும் பயிற்சிகள் துவங்கவில்லை.
திட்டமிட்டபடி இலங்கை மற்றும் ஜிம்பாப்வே அணியுடனான கிரிக்கெட் தொடர் ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் நடைபெற இருந்தது. மைதானங்களில் ரசிகர்கள் இல்லாமல் இந்த இரண்டு தொடர்களும் நடத்தலாம் என ஆலோசனை நடைபெற்று வந்த நிலையில் பிசிசிஐ திடீரென தற்போது இரண்டு தொடர்களையும் நடத்த வேண்டாம் என உத்தரவிட்டு இருக்கிறது.
ஆகஸ்ட் மாதங்களில் நடத்திக் கொள்ளலாமா? இலங்கை நிர்வாகம் பிசிசிஐ உடன் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது.
மார்ச் மாதம் இறுதியில் ஐபிஎல் தொடர் நடக்க இருந்தது தடைபட்டதால் பிசிசிஐ-க்கு சுமார் நான்காயிரம் கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. மீண்டும் வருவாய் ஈட்டும் நோக்கில் ஆகஸ்ட் மாதம் ஐபிஎல் நடத்துவதற்கு பிசிசிஐ முடிவெடுத்துள்ளதாக அதன் வட்டார செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
Photo by: Deepak Malik /SPORTZPICS for BCCI
மேலும் வெளிநாட்டு வீரர்கள் அல்லாமல் இந்திய வீரர்கள் மட்டுமே வைத்து ஐபிஎல் தொடரில் நடத்தவும் அந்த ஆலோசனை நடைபெறுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளதால் ரசிகர்கள் அதிர்ச்சியில் இருக்கின்றனர்.