இலங்கை அணிக்கு உதவிய இந்திய கோச் டிராவிட்! எல்லை தாண்டிய நேசம்! நெகிழும் டிவிட்டர்வாசிகள்!

இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதிய 3வது ஒருநாள் போட்டி நேற்று நடந்தது. 3 போட்டிகள் கொண்ட தொடரை இதற்கு முன்பே 2-0 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது. எஞ்சிய மூன்றாவது ஒருநாள் போட்டியில் நேற்று இலங்கை அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

முதலில் இந்திய அணி பேட்டிங் செய்த பொழுது 23 வது ஓவரில் ஆட்டத்தில் மழை குறுக்கிட்டது. அப்பொழுது இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் இலங்கை அணி கேப்டன் உடன் இணைந்து சிறிது நேரம் உரையாடினார். அவருக்கு தகுந்த அறிவுரைகளை ராகுல் டிராவிட் வழங்கியது இந்திய ரசிகர்களுக்கு தெரியவந்தது. இந்த விஷயம் இந்திய ரசிகர்களை நெகழ்ச்சிக்கு ஆளாக்கியது.

225 ரன்களுக்கு ஆட்டமிழந்த இந்திய அணி

நேற்று இந்திய அணி ஆரம்பத்தில் மிக அற்புதமாக விளையாடியது. கேப்டன் தவான் 13 ரன்களில் ஆட்டமிழந்தார். ஆனால் பிரித்வி ஷா மற்றும் சஞ்சு சாம்சன் இவர்கள் இருவரும் மிக அற்புதமான துவக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்தார்கள். எனினும் இவர்கள் இருவரும் 50 ரன்கள் குவிக்க முடியாமல் 40+ ரன்களில் ஆட்டமிழந்தனர்.

அடுத்து வந்த மனிஷ் பாண்டே 11 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். சூரியகுமார் யாதவ் மட்டும் 40 ரன்கள் அடித்து விடுகிறார் வரிசையில் நம்பிக்கை கொடுத்தார்.அதற்கு பின்னர் வளர்ந்த விளையாடி ஹர்திக் பாண்டியா 19 ரன்களில் ஆட்டமிழக்க இறுதியில் இந்திய அணி 10 விக்கெட்டுகளையும் இழந்து 275 ரன்கள் மட்டுமே எடுத்தது.

3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இலங்கை அணி

பெர்னாண்டோ ஆரம்பத்தில் 76 ரன்கள் குவித்ததும் ராஜபக்ஷ 65 ரன்கள் குவித்ததும் இலங்கை அணியின் வெற்றியை உறுதிப்படுத்தியது. அதற்குப் பின்னர் வந்த ஹசரங்கா 24 ரன்களும் இறுதியாக மெண்டிஸ் 15 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இவர்களின் பங்களிப்பின் காரணமாக இலங்கை அணி இறுதியில் 3 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

ஆட்டநாயகன் விருது பெர்னாண்டோவுக்கு வழங்கப்பட்டது. தொடர் நாயகன் விருது சூரியகுமார் யாதவுக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. நேற்று இந்திய அணி தோல்வி அடைந்து இருந்தாலும் ராகுல் டிராவிட் ஒரு இளம் கிரிக்கெட் வீரருக்கு ( இலங்கை அணியின் கேப்டன் ஷனங்கா ) நெருக்கடியான நேரத்தில் தன்னால் முடிந்த அறிவுரைகளை கூறியது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை ஏற்படுத்தியது.

Prabhu Soundar:

This website uses cookies.