ஊரடங்கு உத்தரவை மீறி வெளியே வந்த நட்சத்திர இந்திய வீரருக்கு அபராதம்! இவருக்கு மட்டும் தனியா?

இமாச்சல பிரதேச மாநில கிரிக்கெட் வீரரான ரிஷி தவான், ஊரடங்கு உத்தரவை மீறியதற்காக 500 ரூபாய் அபராதம் செலுத்தியுள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக கடந்த மாதம் 24-ந்தேதியில் இருந்து 21 நாள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த 21 நாட்களும் பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்குவதை தவிர மற்றவைகளுக்காக வெளியே வரவேண்டாம் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஆனால், பொதுமக்கள் கொரோனா வைரசின் தீவிரத்தை உணராமல் வீதியில் உலா வருகின்றனர். இதனால் விதிமுறையை மீறும் நபர்கள் மீது அபராதம் விதிக்கின்றனர். மேலும் வெளியே செல்ல வேண்டும் என்றால் அதிகாரிகளிடம் அனுமதி சீட்டு வாங்குவது அவசியம்.

இமாச்சல பிரதேசத்தில் இந்திய அணிக்காக விளையாடிய ரிஷி தவான் தனது வாகனத்தில் வெளியே சென்றுள்ளார். அப்போது போலீசார் அவரது வாகனத்தை நிறுத்தி விசாரணை நடத்தியுள்ளனர். அவர் அனுமதி சீட்டு வாங்கவில்லை என்று தெரியவந்தது.

இதனால் போலீசார் அவருக்கு 500 ரூபாய் அபராதம் விதித்துள்ளது. ரிஷி தவான் ஐபிஎல் கிரிக்கெட்டில் கிங்ஸ் லெவன் பஞ்சாப், மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்காக விளையாடிள்ளார்.

இந்திய அணிக்காக மூன்று ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளிலும், ஒரு டி20 போட்டியிலும் விளையாடியுள்ளார்.

பீகாரில் 60 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த 60 பேரில், 23 பேர் ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் .பாட்னாவில் இருந்து 130 கி.மீ தொலைவில் உள்ள சிவான் மாவட்டத்தில் கிட்டதட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த 23 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
CANBERRA, AUSTRALIA – JANUARY 20: Rishi Dhawan of India appeals during the Victoria Bitter One Day International match between Australia and India at Manuka Oval on January 20, 2016 in Canberra, Australia. (Photo by Mark Nolan/Getty Images)
இந்த சங்கிலி தொடரானது, கடந்த மாதம் ஓமனில் இருந்து திரும்பிய நபரால் ஏற்பட்டுள்ளது. கடந்த மார்ச்.16 ஆம் தேதி சிவான் மாவட்டத்தில் உள்ள பன்ஜ்வார் கிரமத்திற்கு திரும்பிய அந்த நபருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது ஏப்ரல் 4 ஆம் தேதியே தெரிவந்தது. கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்படும் முன்பு, சிவான் மாவட்டத்திலுள்ள உறவினர்களின் வீடு உள்ளிட்ட பகுதிகளுக்கு அவர் சென்று வந்துள்ளார்.
இதனால் உறவினர்கள் 22 பேருக்கும், அவரது சொந்த கிராமமான பன்ஜ்வாரை சேர்ந்த 2 பேருக்கும் கொரோனா பரவியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இவர்களையும் சேர்த்து, சிவான் மாவட்டத்தில் மட்டும் 31 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.23 பேரில் 4 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இருப்பினும் அவர்கள் மேலும், 2 வாரங்களுக்கு தனிமைப்படுத்திக்கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.இதைத் தொடர்ந்து, சிவான் மாவட்ட எல்லை பகுதிகள் அதிகாரிகளால் மூடக்கப்பட்டுள்ளன.

 

Sathish Kumar:

This website uses cookies.