முதன்முறையாக 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடப் போகும் இந்திய அணி! சௌரவ் கங்குலி அறிவிப்பு!
இந்திய அணி தற்போது ஆஸ்திரேலியாவில் விளையாடுகிறது. இந்த தொடர் மிக நீண்ட தொடராக, நான்கு டெஸ்ட் போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகளில் மூன்று சீட்டு டி20 போட்டிகள் என நவம்பர், டிசம்பர், ஜனவரி ஆகிய மாதங்களில் நடக்கப்போகிறது. இரு அணி வீரர்களும் தற்போது பயிற்சி செய்து வருகின்றனர்.
வைரஸ் தொற்று காலத்தில் பல்வேறு கிரிக்கெட் போட்டியில் ஒத்திவைக்கப்பட்டது. அந்த போட்டிகளை எப்படியாவது நடத்திவிட வேண்டும் என்று ஒவ்வொரு கிரிக்கெட் வாரியமும் முயற்சி செய்து வருகின்றன. இந்திய கிரிக்கெட் வாரியமும் அப்படி கைவிட்ட போட்டிகளை மீண்டும் கையில் எடுத்திருக்கிறது.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே மிக நீண்ட தொடர் ஒன்று திட்டமிடப்பட்டிருந்தது. இந்த தொடர் மீண்டும் தற்போது நடக்க போகிறது. இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து அடுத்த வருட துவக்கத்தில் விளையாடப் போவதாக இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் சவுரவ் கங்குலி அறிவித்திருக்கிறார்.
அதாவது இங்கிலாந்து அணி இந்தியாவிற்கு வந்து நான்கு டெஸ்ட் போட்டிகள் 3 ஒருநாள் போட்டிகள் 5 டி20 போட்டிகள் கொண்ட மிகப்பெரிய தொடரில் விளையாடுகிறது. இதுகுறித்து அவர்கள் கூறுகையில்…
இங்கிலாந்து அணி இந்தியாவிற்கு வந்து 4 டெஸ்ட் போட்டியில் 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 5 டி20 போட்டிகளில் விளையாட போகிறது. இது இரு அணிகளுக்கு எதிரான தொடர் தற்போது இந்திய அணி ஆஸ்திரேலியாவில் இருக்கிறது. இந்த தொடர் முடிந்தவுடன் இதுகுறித்த முழுமையான திட்டமிடல் வெளியிடப்படும் என்று தெரிவித்திருக்கிறார் சௌரவ் கங்குலி.