ஆஸ்திரேலியாவ பார்த்து பயப்பட வேணாம்… இறுதி போட்டிக்கு வர போறது இந்த இரண்டு டீம் தான்; மிஸ்பாஹ் உல் ஹக் கணிப்பு !!

ஆஸ்திரேலியாவ பார்த்து பயப்பட வேணாம்… இறுதி போட்டிக்கு வர போறது இந்த இரண்டு டீம் தான்; மிஸ்பாஹ் உல் ஹக் கணிப்பு

நடப்பு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டிக்கு தகுதி பெற வாய்ப்புள்ள அணி குறித்தான தனது முன்னாள் கிரிக்கெட் வீரரான மிஸ்பாஹ் உல் ஹக் ஓபனாக வெளிப்படுத்தியுள்ளார்.

கடந்த மாதம் இறுதியில் துவங்கிய ஒருநாள் போட்டிகளுக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர், அடுத்த சில தினங்களில் நிறைவடைய உள்ளது.

மொத்தம் 45 லீக் போட்டிகள் இந்த தொடரில் இந்தியா, தென் ஆப்ரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகள் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன.

நவம்பர் 15ம் தேதி நடைபெறும் முதல் அரையிறுதி போட்டியில் இந்திய அணியும், நியூசிலாந்து அணியும், 16ம் தேதி நடைபெறும் இரண்டாவது அரையிறுதி போட்டியில் தென் ஆப்ரிக்கா அணியும், ஆஸ்திரேலிய அணியும் மோத உள்ளன.

அடுத்த சில தினங்களில் உலகக்கோப்பை தொடர் நிறைவடைய உள்ளதால், முன்னாள் வீரர்கள் பலர் எந்த அணி சாம்பியன் பட்டம் வெல்லும், எந்த எந்த அணிகள் இறுதி போட்டிக்கு தகுதி பெறும் என்பது குறித்தான தங்களது கணிப்புகளை ஓபனாக வெளிப்படுத்தி வருகின்றனர்.

அந்தவகையில், நடப்பு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் குறித்து பல்வேறு விசயங்கள் பேசி வரும் முன்னாள் பாகிஸ்தான் வீரரான மிஸ்பாஹ் உல் ஹக், எந்த எந்த அணிகள் இறுதி போட்டிக்கு செல்லும் என்பது குறித்தான தனது கணிப்பையும் வெளியிட்டுள்ளார்.

இது குறித்து மிஸ்பாஹ் உல் ஹக் பேசுகையில், “என்னை பொறுத்தவரையில் இறுதி போட்டிக்கு இந்திய அணியும், தென் ஆப்ரிக்கா அணியுமே தகுதி பெறும் என கருதுகிறேன். அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ள நான்கு அணிகளின் பலம், பலவீனங்களை வைத்து பார்க்கையில் மற்ற அனைத்து அணிகளையும் விட இந்திய அணி வலுவானது என்பதால் இந்திய அணி சாம்பியன் பட்டம் வெல்வதற்கும் வாய்ப்பு சற்று அதிகம் என்பதே எனது கருத்து” என்று தெரிவித்தார்.

பாகிஸ்தான் அணியின் மற்றொரு முன்னாள் வீரரான சோயிப் மாலிக் இறுதி போட்டிக்கு இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் தகுதி பெறும் என தெரிவித்துள்ளார்.

Mohamed:

This website uses cookies.