இந்தியா இங்கிலாந்து அணிகள் ஆடும் இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி முதல் பேட்டிங் செய்து 148 ரன்கள் எடுத்தது.
இந்தியா இங்கிலாந்து அணிகள் ஆடும் இரண்டாவது போட்டி கார்டிப் மைதானத்தில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச முடிவு செய்தது. இம்தியா அணி சார்பில் தவான் ரோஹித் இருவரும் துவங்கினர்.
துவக்கத்தில் இருந்தே தடுமாறிய ரோஹித் 9 பந்துகளில் 5 ரன்கள் மட்டுமே எடுத்து பால் பந்தில் அவுட் ஆனார். அதனை தொடர்ந்து தவானும் துரதிஷ்டவசமாக ரன் அவுட் ஆகி வெளியேறினார்.
இன்று சிறப்பாக ஆடுவார் என எதிர்பார்க்கபட்ட கே வ்ள் ராகுல் வெறும் 8 பந்துகள் பிடித்து 6 ரன்களுக்கு பிளங்கெட் பந்தில் கிளீன் போல்டாகி வெளியேறினார். 22 ரன்களுக்கு 3 விக்கெட் இழந்து தடுமாறியது இந்திய அணி.
அதன் பின் விராத் கோலி மற்றும் ரெய்னா இருவரும் தடுமாற்றத்தில் இருந்து இந்திய அணி மீட்டனர். அதன்பின் 27 ரன்களுக்கு ரெய்னாவும் வெளியேறினார்.
நன்கு ஆடிய விராத் கோலி 47 ரன்களுக்கு ஆட்டமிழந்தது அறைசாத வாய்ப்பை தவறவிட்டார். 17 ஓவர்களில் 111 ரன்கள் மட்டுமே எடுத்து தடுமாறிய இந்திய அணிக்கு கடைசியாக நன்றாக ஆடிய தோனி பவுண்டரிகளாக விளாசினார். இறுதியில், இந்திய அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 148 ரன்கள் எடுத்தது.
இங்கிலாந்து அணியில் டேவிட் வில்லி 4 ஓவர்களுக்கு 18 ரன்கள் விட்டுக்கொடுத்து 1 விக்கெட் வீழ்த்தினார். பிளங்கட் 4 ஒவ்ர்களுக்கு 17 விட்டுக்கொடுத்து 1 விக்கெட் வீழ்த்தினார்.