இந்தியா அடுத்ததாக 2 அணிகளுடன் டி20 தொடரில் கலந்து கொள்ளவுள்ளது ! காரணம் என்னவென்றால்…

இந்திய அணி தற்போது இங்கிலாந்து அணியுடன் 4 டெஸ்ட், 5 டி20, 3 ஒருநாள் போட்டிகள் என மிகப்பெரிய தொடரில் விளையாடி வருகிறது. டெஸ்ட் தொடரில் இந்திய அணி 3-1 என தொடரை கைப்பற்றியது. இதையடுத்து அகமதாபாத்தில் நடைபெற்று வரும் 5 டி20 போட்டிகளில் 4 போட்டிகள் முடிவடைந்துள்ளது.

இதில் இந்திய அணி இரண்டு போட்டியிலும் இங்கிலாந்து அணி இரண்டு போட்டியிலும் வெற்றி பெற்று இருக்கிறது. இதன் மூலம் இந்த டி20 தொடர் 2-2 என சமநிலையில் உள்ளது. இந்த டி20 தொடரை தீர்மானிக்கும் கடைசி டி20 போட்டி நாளை மாலை 7 மணியளவில் அகமதாபாத்தில் நடைபெற இருக்கிறது.

இதையடுத்து இந்த இரு அணிகளும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இந்த ஒருநாள் தொடர் பூனே மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதற்கான இந்திய அணியும் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்தியாவில் வருகின்ற அக்டோபர் மாதத்தில் உலகக்கோப்பை டி20 தொடர் நடைபெற உள்ளதால் அனைத்து அணிகளும் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகிறது.

அந்தவகையில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் விளையாடி வரும் இந்த டி20 தொடரை பயிற்சி ஆட்டமாகவும் பார்க்கப்படுகிறது. இதற்கு பின் இந்திய அணி வீரர்கள் அனைவரும் ஐபிஎல் தொடரில் கலந்துக்கொள்ள உள்ளனர். இதையடுத்து இந்திய அணி ஜூலை மாதத்தில் இங்கிலாந்து அணியுடன் டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது.

இந்நிலையில், இந்திய அணி உலகக்கோப்பை தொடருக்கு தயாராகும் வகையில் பிசிசிஐ இரண்டு புதிய திட்டங்களை செய்து இருக்கிறது. பிசிசிஐ நியூசிலாந்து மற்றும் தென்னாப்பரிக்கா கிரிக்கெட் வாரியத்துடன் பேசி வருகிறது. ஒருவேளை அவர்கள் இதை ஒத்துக்கொண்டால் இந்திய அணி நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணியுடன் டி20 போட்டிகளில் பங்கேற்றும். இது உலகக்கோப்பை தொடருக்கு பயிற்சியாக இருக்கும்.

Prabhu Soundar:

This website uses cookies.