இங்கிலாந்திற்கு மரண அடி இருக்கு….. இந்தியாவை பார்த்து மிரண்டு போன மான்டி பனேசர்

தற்பொழுது இந்தியா இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருக்கிறது நியூசிலாந்துக்கு எதிராக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு விட்டீர்களா இங்கிலாந்து அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை ஆகஸ்ட் மாதம் விளையாட இருக்கிறது.

இந்நிலையில் இங்கிலாந்து அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் மாண்டி பணேசர் இந்திய அணி தான் டெஸ்ட் தொடரை கைப்பற்றும் அதுவும் 5-0 என்ற கணக்கில் மிக எளிதாக கைப்பற்றும் என்று கூறியுள்ளார்.

ஆகஸ்ட் மாதத்தில் மைதானங்கள் இந்திய வீரர்களுக்கு சாதகமாக அமையும்

இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள மாண்டி பணேசர், ஆகஸ்ட் மாதங்களில் பெரும்பாலும் இங்கிலாந்து மைதானங்கள் சற்று வரண்டுதான் காணப்படும். ஆகஸ்ட் மாதத்தில் இங்கிலாந்தில் சற்று வெயில் அதிகமாக இருக்கும். அதன் காரணமாக இந்திய பந்துவீச்சாளர்களுக்கு அது மிகப்பெரிய அளவில் கைகொடுக்கும்.

குறிப்பாக சுழல்பந்து வீச்சாளர்களுக்கு அது மிகப் பெரிய அளவில் உதவும் என்று கூறியுள்ளார். கடந்த 5 ஆண்டுகளாகவே இந்திய அணி டெஸ்ட் போட்டியில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இந்தியாவை அவ்வளவு எளிதில் இங்கிலாந்து அணியால் தோற்கடிக்க முடியாது. தற்போது சூழ்நிலை அவர்களுக்கு சாதகமாக அமையும் உள்ளதால் இந்திய அணி தொடரை மிக எளிதாக கைப்பற்றும் என நம்பலாம் என்று கூறியுள்ளார்.

நியூசிலாந்துக்கு எதிராக களமிறங்க போகும் இங்கிலாந்து பி அணி

மேலும் பேசிய அவர் தற்பொழுது நியூசிலாந்து அணிக்கு எதிராக இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இங்கிலாந்து அணி மேற்கொள்ள இருக்கிறது என்று கூறியுள்ளார். அந்த இரண்டு போட்டிகளிலும் சீனியர் வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.

எனவே முற்றிலுமாக மாறுபட்டு இங்கிலாந்து அணி நியூசிலாந்து அணிக்கு எதிராக விளையாடப் போகிறது என்று கூறிய அவர், பலம் வாய்ந்த நியூசிலாந்து அணியை இங்கிலாந்து பி அணி வீரர்கள் எவ்வாறு கையாளப் போகிறார்கள் என்று பார்க்கப் போகிறோம். வருங்கால இங்கிலாந்து அணியின் டெஸ்ட் வீரர்கள் யார் என்று அந்த தொடரில் தெரிந்துவிடும் என்றும்
மாண்டி பணேசர் கூறியுள்ளார்.

Prabhu Soundar:

This website uses cookies.