அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு நாளை இங்கிலாந்தில் நடக்க இருப்பது குறிப்பிடத்தக்கது. நாளை நடைபெற உள்ள போட்டி தொடர்பாக இப்போதே ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய ஆர்வம் தூண்டப்பட்டு இருக்கிறது.
இந்நிலையில் நியூசிலாந்து அணியின் சீனியர் வீரர் ராஸ் டைலர் இந்திய அணியை நாளைய போட்டியில் நியூசிலாந்து அணி போராடி தான் வெல்ல வேண்டி வரும் என்று கூறியிருக்கிறார்.
இந்திய அணி அனைத்து விதத்திலும் மிக சிறப்பான அணி
இது பற்றி விளக்கமாகக் கூறியுள்ள ராஸ் டைலர் இந்திய அணி பேட்டிங் பவுலிங் ஃபீல்டிங் என அனைத்து ஏரியாக்களிலும் மிகவும் பலமான அணி. எனவே அந்த அணியை வீழ்த்துவது அவ்வளவு சுலபமான விஷயம் கிடையாது.
கடந்த ஆண்டு இறுதியில் ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் வைத்து வீழ்த்திய அணி, அதேபோல அதனுடைய சொந்த மண்ணில் வைத்து இங்கிலாந்து அணியை மிகப்பெரிய வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது. மேலும் கடந்த இரண்டு ஆண்டுகளாகவே இந்திய அணி டெஸ்ட் போட்டிகளில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. எனவே அந்த அணியை அவ்வளவு சுலபமாக எங்களால் வீழ்த்திவிட முடியாது என்று ராஸ் டைலர் தற்போது கூறியிருக்கிறார்.
இறுதிப்போட்டிகள் களம் இறங்கப் போகும் 15 வீரர்கள் கொண்ட பட்டியலை அறிவித்த இந்தியா மற்றும் நியூஸிலாந்து
தற்பொழுது இந்த இரண்டு அணி நிர்வாகங்களும் 15 வீரர்கள் கொண்ட பட்டியலை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இதிலிருந்து பதினொரு வீரர்கள்தான் நாளை இறுதி போட்டியில் களமிறங்க போகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய அணி
ரோஹித் சர்மா, சுப்மன் கில், அஜிங்கிய ரஹானே, விராட் கோலி புஜாரா , ஹனுமா விஹாரி, ரிஷப் பண்ட், ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, இஷாந்த் சர்மா, முகமது ஷமி, உமேஷ் யாதவ் மற்றும் முகமது சிராஜ்
நியூஸிலாந்து அணி
டாம் லதம், கேன் வில்லியம்சன், டேவிட் கான்வாய், ராஸ் டைலர், காலின் டீ கிரான்ட் ஹோமி,டாம் பிளன்டெல், மேட் ஹென்றி, பி ஜே வாட்லிங், வில் யங், ஹென்றி நிக்கோலஸ், அஜாஸ் பட்டேல், போல்ட், சவுத்தீ, நெய்ல் வாக்னர் மற்றும் ஜேமிசன்