ஆஸ்திரேலியா அணி வீரரான ஸ்டீவ் ஸ்மித்தை அவுட் செய்வதற்க்கு இந்திய அணி தனி வியூகம் வைத்துள்ளது என ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வீரர் மைக்கெல் ஹஸி தெரிவித்துள்ளார்.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான இரண்டாம் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது இதற்கு முக்கிய காரணம் இந்திய அணியின் அபாரமான பந்து வீச்சுதான்.
இந்திய அணி வீரர்களின் அபாரமான பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் ஆஸ்திரேலிய அணி வீரர்கள் தடுமாறி தனது விக்கெட்டை பறிகொடுத்தனர்.குறிப்பாக ஆஸ்திரேலிய அணியின் அதிரடி ஆட்டக்காரரான ஸ்டீவ் ஸ்மித்திற்க்கு இந்திய அணி ஒரு தனி வியூகம் வகுத்து அவரை அவுட் செய்தனர்.
முக்கியமாக லெக் சைடில் பில்டிங் அமைத்து நேராக பந்துவீசி ஸ்டீவ் ஸ்மித் ரன்களை குவிப்பதில் இருந்து தடுத்தனர்.இந்தியாவுக்கு எதிராக ஸ்டீவ் ஸ்மித் மிக அதிரடியாக விளையாடுவார் என்று எதிர்பார்த்த நிலையில் இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சால் அவரால் எதிர்பார்த்த அளவுக்கு விளையாடவில்லை.
மேலும் மைக்கேல் ஹஸி கூறியதாவது கடந்த முறை நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் சிலமுறை ஸ்டீவ் ஸ்மித் ஷார்ட் பாலை எதிர்கொள்ளும் போது தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.அதேபோன்று யுத்தியை இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா பயன்படுத்தி ஸ்டீவ் ஸ்மித்தை ரன்களை குவிக்க முடியாமல் திணறசெய்தார். அவரின் அருமையான பந்துவீச்சாள் ஸ்டீவ் ஸ்மித் தனது விக்கெட்டைபறிகொடுத்தார்.
இந்நிலையில் 3வது டெஸ்ட் போட்டி வருகிற ஜனவரி 3 அன்று தொடங்க உள்ளது. இதில் யார் வெற்றி கொள்வார் என்று கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் விமர்சகர்கள் மத்தியிலும் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது