இந்நிலையில் தொடரை தீர்மானிக்கும் மூன்றாவது மற்றும் கடைசி டி 20 போட்டி இன்று ப்ரிஸ்டோல் நகரில் நடைபெற உள்ளது.
அதேநேரத்தில் சூழல்பந்து வீச்சிற்கு ஏற்றவாறு அமைந்து இருப்பதால் சஹால், குல்தீப் யாதவ், அடில் ரஷித் ஆகியோருக்கு இன்று நிச்சயம் விக்கெட்கள் விழும் என்று தெரிகிறது.
இந்திய அணியை பொறுத்த வரையில் தொடக்க வீரர் ரோகித் ஷர்மா மற்றும் ஷிகர் தவான் ஆகியோர் தொடர்ந்து ஏமாற்றத்தை அளித்துவருவதால் இன்றைய போட்டியில் கே.எல்.ராகுல் தொடக்க ஆட்டகாரராக களமிறங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், ப்ரிஸ்டோல் ஆடுகளம் சிறியதாக இருப்பதால் இன்றைய ஆட்டத்தில் பவுண்ட்ரி, சிக்ஸ்ர் மழை பொழியவும் வாய்ப்புள்ளது.
அதேநேரத்தில் சூழல்பந்து வீச்சிற்கு ஏற்றவாறு அமைந்து இருப்பதால் சஹால், குல்தீப் யாதவ், அடில் ரஷித் ஆகியோருக்கு இன்று நிச்சயம் விக்கெட்கள் விழும் என்று தெரிகிறது.
மேலும், இங்கிலாந்து அணியின் மிடில் ஆர்டர் பிரச்சனையை தீர்க்க, அந்த அணியின் நட்சத்திர ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் இன்றைய ஆட்டத்தில் பங்கேற்க வாய்ப்புள்ளது.
இந்திய அணி முன்னதாக இந்த மைதானத்தில் நடந்த கடைசி மூன்று ஒருநாள் போட்டிகளிலும் வென்றுள்ளது. ஆனால் டி20 போட்டிகளை பொறுத்த வரையில் இன்று தான் இந்திய அணி தனது முதல் டி 20 போட்டியை இங்கு விளையாட உள்ளது.
இந்திய அணி ஒருநாள் போட்டியை போலவே இந்த மைதானத்தில் இன்று டி20 போட்டியிலும் வெல்லுமா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
ரசிகர்களால் மிகவும் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ள கடைசி டி20 ஆட்டம் இன்று இரவு 10 மணிக்கு சோனி சிக்ஸ் சேனலில் ஒளிபரப்பாகிறது.