இந்த முன்னாள் வீரரை போன்று இந்திய அணியின் சொத்தாக இருக்க வேண்டும்; கலீல் அஹமது விருப்பம் !!

இந்த முன்னாள் வீரரை போன்று இந்திய அணியின் சொத்தாக இருக்க வேண்டும்; கலீல் அஹமது விருப்பம்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நம்பிக்கை நாயகனான ஜாஹிர் கானை போன்று இந்திய அணியின் சொத்தாக தான் இருக்க விரும்புவதாக இந்திய அணியின் இளம் வீரரான கலீல் அஹமது தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் இளம் இடது கை வேகப்பந்து வீச்சாளரான கலீல் அகமதுக்கு வெஸ்ட் இண்டீஸ் தொடரில் வாய்ப்பு கிடைத்தது. அவருக்கு சீராக இடம் கிடைக்கவில்லை. இடது கை வேகப்பந்து வீச்சாளரான அவர், இந்திய அணியில் நிலையான இடத்தை பிடிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார்.

 

 

இந்நிலையில் ஜாகீர் கான் போன்று இந்திய அணியின் சொத்தாக விரும்புகிறேன் என்று கலீல் அகமது தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கலீல் அகமது கூறுகையில் ‘‘இந்தியாவுக்காக ஜாகீர் கான் விளையாடியதுபோல், நான் விளையாட விரும்புகிறேன். அவர் அணிக்கு என்ன செய்தாரோ அதை நானும் செய்ய விரும்புகிறேன். அவரைப் போல் இந்திய அணியின் சொத்தாக விரும்புகிறேன்.

MELBOURNE, AUSTRALIA – NOVEMBER 23: Khaleel Ahmed of India celebrates getting the wicket of Chris Lynn of Australia during the International Twenty20 match between Australia and India at Melbourne Cricket Ground on November 23, 2018 in Melbourne, Australia. (Photo by Quinn Rooney/Getty Images)

எனக்கு எப்போதெல்லாம் சந்தேகம் வருகிறதோ, அப்தெல்லாம் ஜாகீர்கானை தொடர்பு கொள்வேன். அவர் எப்போதும் எனக்கு ஆலோசனை வழங்குவார்’’ என்றார்.

Mohamed:

This website uses cookies.