டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியின் தகுதியான கேப்டன் இவர் தான்;வெளிப்படையாக பேசிய கெவின் பீட்டர்சன் !!

இந்திய அணிக்கு தகுதியான கேப்டன் யார் என்பது குறித்து இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் கெவின் பீட்டர்சன் பத்திரிகையாளர்கள் சந்திப்பின் போது தெரிவித்துள்ளார்.

ஜனவரி 15ஆம் தேதி ஒட்டுமொத்த கிரிக்கெட் வட்டாரமும் அதிர்ச்சியாகவும் வகையில் தலை சிறந்த டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தனது டெஸ்ட் தொடர் கேப்டன்ஷிப் ராஜினாமா செய்தார்.

தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி 2-1 என தோல்வியை தழுவிய அடுத்த 24 மணி நேரத்தில் விராட் கோலி இந்த அறிவிப்பை வெளியிட்டது கிரிக்கெட் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது.

சமகால கிரிக்கெட் தொடரின் தலைசிறந்த டெஸ்ட் தொடர் கேப்டனாக கருதப்படும் விராட் கோலி இன்னும் 2 அல்லது 3 ஆண்டுகள் இந்திய அணியின் கேப்டனாக பயணிப்பார் என்று அனைவராலும் எதிர்பார்த்த நிலையில், விராட் கோலி தனது கேப்டன்ஷிப்பை ராஜினாமா செய்தது குறித்து ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகிறது.

விராட் கோலி குறித்த பேச்சுகள் ஒரு பக்கம் நிலவி வந்தாலும் இந்திய அணியின் டெஸ்ட் தொடருக்கான அடுத்த கேப்டன் யார் என்ற கேள்வியும் அனைவர் மனதிலும் தோன்றியுள்ளது,இந்திய அணியில் ரோஹித் ஷர்மா, கே எல் ராகுல், ரிஷப் பண்ட் போன்ற வீரர்கள் அணியை வழிநடத்தும் திறமை பெற்றிருப்பதால் இவர்களில் யாரை பிசிசிஐ டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக்கும் என்பது இன்னும் அதிகாரபூர்வமாக தெரியவில்லை.

ஒரு சிலர் இளம் வீரருக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று தெரிவித்தாலும், பெரும்பாலோனர் இந்திய அணியின் கேப்டனாக பழகுவதற்கு இது சாதாரண விஷயம் கிடையாது அதனால் அனுபவ வீரரான ரோஹித் ஷர்மாவையே கேப்டனாக்குங்கள் என்று தெரிவித்து வருின்றனர்.

அந்த வகையில் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் கெவின் பீட்டர்சன் பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியின் தகுதியான கேப்டன் ரோகித் சர்மா தான் என்று தெரிவித்துள்ளார்.

அதுகுறித்து அவர் பேசுகையில், இந்திய அணி அதிஷ்டவசமாக டெஸ்ட் தொடர் கேப்டனாக தேர்ந்தெடுப்பதற்கான வீரர்களை அதிகம் கொண்டுள்ளது, ஆனால் என்னைப் பொறுத்தவரை ரோஹித் சர்மா தான் இந்திய அணியின் டெஸ்ட் தொடருக்கான சிறந்த கேப்டன், கேப்டனாக அவர் முடிவு எடுக்கும் விதம் மிகவும் அற்புதமாக இருக்கும், அவர் ஏற்கனவே தான் ஒரு சிறந்த கேப்டன் என்பதை பலமுறை நிரூபித்துவிட்டார், உதாரணமாக ஐபிஎல் தொடரில் தனது அணிக்கு 5 முறை கோப்பையை வென்று கொடுத்து தான் ஒரு சிறந்த கேப்டன் என்பதை இந்த உலகுக்கு காட்டி விட்டார்.இதனால் என்னை பொறுத்தவரையில் டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியின் அடுத்த கேப்டனாக ரோஹித் ஷர்மாதான் இருக்க வேண்டும் என்று கெவின் பீட்டர்சன் தெரிவித்திருந்தார்.

மேலும் விராட் கோலி குறித்து பேசிய அவர் விராட் கோலி டெஸ்ட் தொடருக்கான கேப்டன் பதவியில் இருந்து ராஜினாமா செய்தது எனக்கு எந்த ஒரு அதிர்ச்சியையும் கொடுக்கவில்லை. ஏனென்றால் பயோபபில் வாழ்க்கை ஒரு வீரருக்கு எவ்வளவு நெருக்கடியை கொடுக்கும் என்பதும் எனக்கு தெரியும், விராட் கோலி ஒரு குடும்பஸ்தனாக மாறிவிட்டார், இதனால் அவரால் பயோபபில் நெருக்கடியையும் குடும்பத்தையும் சரியாக அணுக முடியவில்லை, இதன் காரணமாகவே விராட் கோலி ராஜினாமா செய்தார் என்று கெவின் பீட்டர்சன் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Mohamed:

This website uses cookies.