இந்தியா அடுத்த ஆண்டு ஆஸ்திரேலியா சுற்றுப்பயன் செய்து விளையாடவுள்ளது. இதில் 4 டெஸ்ட் போட்டிகளும் அடங்கும். அவை மெல்போர்ன், சிட்னி, பெர்த் மற்றும் அடிலேட் ஆகிய நகரங்களில் நபாக்கவுள்ளது. இதில் கடைசி டெஸ்ட் போட்டி நடக்கும் அடிலேட் மைதானத்தில் இந்திய மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் பகல்-இரவு டெஸ்ட் போட்டியில் கண்டிப்பாக விளையாடும் என ஆஸ்திரேலியா நம்பிக்கை தெரிவித்துள்ளது.
கிரிக்கெட் போட்டி முதன்முதலாக டெஸ்ட் ஆட்டங்களாக மட்டுமே நடைபெற்றது. அதன்பின் ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் போட்டிகள் அறிமுகப்படுத்தப்பட்டன. டி20 கிரிக்கெட் போட்டியால் டெஸ்ட் போட்டிக்கான வரவேற்பு வெகுவாக குறைந்துள்ளது.
பாரம்பரியமான டெஸ்ட் போட்டி அழிந்துவிடக் கூடாது என்பதில் முன்னணி கிரிக்கெட் அணிகள் விரும்புகிறது. ஐந்து நாட்கள் செலவழித்து தற்போது போட்டியை ரசிகர்கள் பார்க்க விரும்பாததால், பகல் – இரவு போட்டியாக நடத்த ஆலோசிக்கப்பட்டது.
பகல் – இரவு போட்டியாக நடத்தினால் வேலை முடிந்தபின்னர், ரசிகர்கள் மைதானம் வந்து போட்டியை காணலாம் என்பதால், முதன்முதலாக ஆஸ்திரேலியா பகல் – இரவு டெஸ்ட் போட்டியை நடத்த முயற்சி எடுத்தது. பல்வேறு சோதனைகளுக்குப் பிற கடந்த 201516-ல் ஆஸ்திரேலியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் பகல் – இரவு டெஸ்ட் கிரிக்கெட் போட்டி அடிலெய்டில் நடைபெற்றது. இந்த போட்டிக்கு ரசிகர்களின் ஆதரவு அதிக அளவில் இருந்து.
அதன்பின் பாகிஸ்தான், இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், இலங்கை அணிகள் பகல் – இரவு டெஸ்ட் போட்டியில் விளையாடிவிட்டன. ஆனால் இந்தியா மட்டும் இன்னும் பகல் – இரவு டெஸ்ட் போட்டியில் விளையாடவில்லை.
இந்நிலையில் அடுத்த முறை இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்தும்போது கண்டிப்பாக பகல் – இரவு டெஸ்டில் விளையாடும். ஆஸ்திரேலியாவின் வேண்டுகோளை இந்திய கிரிக்கெட் வாரியம் ஏற்கும் என ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத் தலைவர் சுதர்லேண்டு நம்பிக்கை தெரிவித்துள்ளார்.