பேயாட்டம் ஆடிய ஹேட்மயர்… சரணடைந்த இந்தியா!

முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி 8 விக்கெட் வித்தியாசத்தில் விண்டீஸ் அணி அபார வெற்றி பெற்றது.

டி20 தொடர் முடிவுற்ற பிறகு இன்று சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில், இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிய முதல் ஒருநாள் போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற விண்டீஸ் அணியின் கேப்டன் பொல்லார்டு பந்து வீச்சை தேர்வு செய்தார்.

இதனையடுத்து களமிறங்கிய துவக்க வீரர் கேஎல் ராகுல் 6 ரன்களிலும், அடுத்து வந்த கேப்டன் கோலி 4 ரன்களிலும் ஆட்டம் இழந்து அதிர்ச்சி அளித்தனர். பின்னர் ஓரளவிற்கு நிதானித்து ஆடிவந்த ரோஹித் சர்மாவும் 36 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனால் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டது.

இந்திய அணிக்கு பின்னர் ஜோடி சேர்ந்த இளம் வீரர்களான ரிஷப் பண்ட் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் இருவரும் ஆட்டமிழக்காமல் ஆடி வந்தனர். துரதிஸ்டவசமாக ஷ்ரேயாஸ் 70 ரன்களிலும், ரிஷப் பண்ட் 71 ரன்களிலும் ஆட்டமிழந்து சதம் அடிக்கும் வாய்ப்பை நழுவவிட, இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 287 ரன்கள் சேர்த்தது.

அடுத்து களமிறங்கிய விண்டீஸ் அணியின் துவக்க வீரர் ஆம்ரேஷ் 9 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் ஜோடி சேர்ந்த சாய் ஹோப் மற்றும் இளம் வீரர் ஹெட்மையர் இருவரும் இந்திய அணியின் பந்து வீச்சை துவம்சம் செய்தனர்.

அதிரடியாக ஆடிய ஹெட்மையர் சதம் அடித்தார். இவர் 7 சிக்ஸர்கள் மற்றும் 11 பவுண்டரிகள் விளாசி, 139 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

இவருக்கு பக்கபலமாக மறுமுனையில் இருந்த சாய் ஹோப் நிதானித்து ஆடி சதம் அடித்தார். அவர் இறுதி வரை ஆட்டமிழக்காமல் 102 ரன்கள் குவித்தார்.

இறுதியில் விண்டீஸ் அணி 47.5 ஓவர்களில் 291 ரன்கள் குவித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் தற்போது விண்டீஸ் அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

Prabhu Soundar:

This website uses cookies.