இந்திய அணிக்கு இப்போது இதுமட்டுமே தேவை; சஞ்சய் மஞ்ச்ரேக்கர் விளக்கம்! உண்மைதான் போல..

இந்திய அணிக்கு இப்போது தேவை எல்லாம் இது மட்டுமே என்று சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கருத்து தெரிவித்துள்ளார்.

தென் ஆப்பிரிக்க அணியுடன் நடைபெற்ற ஒருநாள் போட்டிகளுக்கான தொடரில் மூன்று போட்டிகளை இழந்து இந்திய அணி வரலாற்று தோல்வியை சந்தித்திருக்கிறது. மூன்று போட்டிகளிலும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான தவறை இந்திய அணி செய்திருப்பதாக கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

பேட்டிங்கில் மிடில் ஆடரில் களமிறங்கும் வீரர்கள் வரிசையாக சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். பந்துவீச்சாளர்களே மூன்று போட்டிகளிலும் கீழ் வரிசையில் நன்றாக விளையாடியது குறிப்பிடத்தக்கது. பந்துவீச்சில் சுழல் பந்துவீச்சாளர்கள் 15 முதல் 40 ஓவர்களுக்குள் போதிய அளவிற்கு விக்கெட்டுகள் எடுக்கவில்லை. இதன் காரணமாக, எதிரணி எளிதாக பார்ட்னர்ஷிப் அமைத்தது. எளிதில் 280 ரன்களுக்கும் அதிகமாக அடிக்க முடிந்தது.

இந்திய அணிக்கு மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் பார்ட்னர்ஷிப் அமைக்க தவறியதால், இலக்கை கடக்க இயலாமல் வெற்றி பெறவும் தவறியது. மூன்று போட்டிகளிலும் இந்திய அணி தோல்வியை சந்தித்ததற்கு முக்கிய காரணமாக இது மட்டுமே இருக்கிறது என்று கருத்து தெரிவித்திருக்கிறார் சஞ்சய் மஞ்ச்ரேக்கர். அவர் கூறுகையில்,

“இந்திய அணியின் தோல்வியை வைத்து பார்க்கையில், தெள்ளத் தெளிவாக தெரிந்துவிட்டது. மிடில் ஓவர்களில் விக்கெட்டுகள் எடுத்து போட்டியை மாற்றும் அளவிற்கு சுழல் பந்துவீச்சாளர்கள் இல்லை. சஹல் மற்றும் குல்தீப் இருவரும் இருந்தபோது, இந்திய அணி அதிக அளவில் வெற்றிகளை பெற்று இருக்கிறது. புள்ளிவிவரங்களும் அப்படித்தான் கூறுகிறது. சஹல் இன்னும் அதே மனநிலையில் இருக்கிறார் என நினைக்கிறேன். அவருக்கு பக்கபலமாக மற்றொரு சுழல்பந்து வீச்சாளர் இல்லை.

ஜடேஜா மற்றும் ஜெயந்தியாக இருவரும் போட்டியை மாற்றும் அளவிற்கு சுழல் பந்துவீச்சாளர்கள் ஆக இருப்பார்கள் என்று நான் நம்பவில்லை. ஆகையால் இந்த இடத்தில் இந்திய அணி சரியான வீரர்களை தேர்வு செய்ய வேண்டும். இதே நிலை தொடர்ந்தால் உலகக்கோப்பைக்குள் இந்திய அணியை கட்டமைக்க இயலாது.” என்றார்.

தென்னாப்பிரிக்கா அணியுடனான 3வது ஒருநாள் போட்டியில் மிடில் ஓவரில் ஷ்ரேயாஸ் ஐயர் 3 ஓவர்கள் வீசி 23 ரன்கள் விட்டுக் கொடுத்தார் எதுவும் எடுக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Prabhu Soundar:

This website uses cookies.