ஒரு நாள் தரவரிசையில் இந்திய அணி முதலிடம் பிடிக்குமா? : கோலியின் படை என்ன செய்ய வேண்டும்?

BIRMINGHAM, ENGLAND - JUNE 04: Virat Kohli, captain of India waits to lead his team out against Pakistan ahead of the ICC CHampions Trophy match between India and Pakistan at Edgbaston on June 4, 2017 in Birmingham, England. (Photo by Matthew Lewis-IDI/IDI via Getty Images)

டர்பனில் வரும் வியாழக்கிழமை தொடங்கும் தென் ஆப்பிரி்க்காவுக்கு எதிரான 6 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரைக் கைப்பற்றினால், சர்வதேச ஒருநாள் தரவரிசைப் பட்டியலில் இந்திய அணி முதலிடத்தை பிடிக்க முடியும்.

தரவரிசையில் இப்போது இந்திய அணி 2-ம் இடத்தில் இருக்கிறது.

தென் ஆப்பிரிக்கா பயணம் சென்றுள்ள இந்திய அணி டெஸ்ட், ஒரு நாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. டெஸ்ட் தொடரை 2-1 என்று இந்திய அணி இழந்துள்ள நிலையில், அடுத்து ஒருநாள் தொடரில் விளையாட இருக்கிறது. . 6 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் டர்பன் நகரில் வரும் வியாழக்கிழமை தொடங்குகிறது.

Indian Captain Virat Kohli (C), South African Captain Faf du Plessis, and bowler Lungi Ngidi (L) wait on the side for their post match interview after South African team won the second test match and the series against India during the fifth day of the second test cricket match between South Africa and India at the Supersport cricket ground, on January 17, 2018, in Centurion. / AFP PHOTO / GIANLUIGI GUERCIA (Photo credit should read GIANLUIGI GUERCIA/AFP/Getty Images)

இந்த தொடரை 4-2 என்று இந்திய அணி கைப்பற்றினாலோ, அல்லது அதற்கும் மேலாக 5-1, 6-0 என்ற கணக்கில் தொடரை வென்றாலோ ஐ.சிசி தரவரிசை பட்டியலில் முதலிடத்தைப் பிடிக்க முடியும்.

ஆனால், தற்போது முதலிடத்தில் இருக்கும் தென் ஆப்பிரிக்க அணி தனது இடத்தை தக்கவைக்க இந்த தொடரை சமன் செய்தாலே போதுமானது.

அதேசமயம், இந்த ஒருநாள் தொடரை இந்திய அணி இழக்கும் பட்சத்தில், அதாவது தொடரை 5-1 என்று தென் ஆப்பிரிக்கா கைப்பற்றினால், தரவரிசையில் இங்கிலாந்துக்கு அடுத்ததாக 3-வது இடத்துக்கு இந்திய அணி தள்ளப்படும்.

வீரர்களுக்கான ஒருநாள் தரவரிசைப் பட்டியலில் இந்திய அணியின் விராத் கோலி 876 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறார். தென் ஆப்பிரிக்க வீரர் டீ வில்லியர்ஸ் 872 புள்ளிகளுடன் 2-ம் இடத்தில் கோலியை நெருங்கி வருகிறார்.

Team wanted BCCI to tweak Sri Lanka series or cancel the T20Is

அதைத் தொடர்ந்து, ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர் 823 புள்ளிகளுடன் 3-ம் இடத்திலும், ரோகித் ச்ரமா 816 புள்ளிகளுடன் 4-ம் இடத்திலும், பாகிஸ்தான் வீரர் பாபர் ஆசம் 813 புள்ளிகளுடன் 5-ம் இடத்திலும் உள்ளனர். மகேந்திர சிங் தோனி சரிந்து 13 இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார், சிகர்

பந்துவீச்சில் இந்திய வீரர் ஜஸ்பிரித் பும்ரா 728 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்தில் உள்ளார். முதலிடத்தில் நியூசிலாந்து வீரர் டிரன்ட் போல்ட் 729 புள்ளிகளுடனும், தென் ஆப்பிரிக்க வீரர் இம்ரான் தாஹிர் 743 புள்ளிகளுடன் 2-ம் இடத்திலும் உள்ளனர். இடது கை சுழற்பந்துவீச்சாளர் அக்ஸர் படேல் 643 புள்ளிகளுடன் 10-வது இடத்தில் உள்ளார். ஆல்ரவுண்டர்கள் பிரிவில் எந்த இந்திய வீரரும் முதல் 10 இடங்களில் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Editor:

This website uses cookies.