“பும்ரா இல்லாமல் இந்தியா மோசமா இருக்கு; ஆனால் அசால்டா இருக்காதீங்க” இவர் ஒருவர் போதும் பாகிஸ்தானை வீழ்த்த.. – பாகிஸ்தானை எச்சரித்த பாகிஸ்தான் முன்னாள் வீரர்!

பும்ரா இல்லாமல் இந்திய அணி பின்னடைவை சந்தித்து இருக்கிறது. ஆனால் இவர் ஒருவர் நினைத்தால் ஆட்டத்தின் போக்கையே மாற்ற முடியும் என்று பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை விடுத்திருக்கிறார் முன்னாள் வீரர் ஆகிப் ஜாவத்.

டி20 உலக கோப்பை தொடரில் பங்கேற்பதற்கு இந்திய அணி ஆஸ்திரேலிய சென்றுவிட்டது. உலக கோப்பையில் தனது முதல் போட்டியை துவங்குவதற்கு முன்னரே இந்திய அணிக்கு அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. முதலில் காயம் காரணமாக ஜடேஜா விலகினார். பின்னர் அணியில் இடம்பெற்று விட்டு காயம் ஏற்பட்டதால் பும்ரா விலகியுள்ளார் இதனால் பந்துவீச்சில் இந்திய அணி பின்னடைவை சந்தித்து இருக்கிறது.

ஆஸ்திரேலியாவில் பயிற்சி போட்டியின்போது அர்ஷதிப் சிங்-க்கு முதுகு பகுதியில் அசவுகரியாக இருப்பதாக தகவல்கள் வருகின்றன. இதைப்பற்றிய தகவல்களை நிர்வாகம் முழுமையாக வெளியிடவில்லை. பும்ராவிற்கு மாற்றாக அனுபவ வீரர் முகமது சமி இந்திய அணியில் இணைந்து இருக்கிறார். இது சற்று ஆறுதலை தந்திருக்கிறது.

இந்நிலையில் இந்திய அணியை வீழ்த்துவதற்கு இவர்கள் இருவரும் போதும் என்று தனது பேட்டியில் இரண்டு பாகிஸ்தான் வீரர்களை குறிப்பிட்டு பேசியுள்ளார் அதன் முன்னாள் வீரர் ஆகிப் ஜாவத். மேலும் ஆட்டத்தின் போக்கை பாகிஸ்தானிடம் இருந்து பறித்து இந்தியாவின் பக்கம் திருப்புவதற்கு இந்த முக்கியமான இந்திய வீரர் போதும் என்றும் பாகிஸ்தானை எச்சரித்து இருக்கிறார். இது குறித்து அவர் பேசுகையில்,

“பும்ரா இல்லாததால் இந்திய அணி பலம்மிக்கதாக தெரியவில்லை. எளிதாக பந்துவீச்சில் உடைந்து விடும் அணிபோல தெரிகிறது. ஆகையால் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் நன்றாக விளையாட வேண்டும். குறிப்பாக இடதுகை பேட்ஸ்மேன்கள் மிடில் ஆர்டரில் இருப்பது பாகிஸ்தானுக்கு கூடுதல் பலமாக இருக்கும். அதேபோல் இந்திய அணியின் டாப் ஆர்டர்களை வீழ்த்துவதற்கு ஷாகின் அப்ரிடி மற்றும் ஹரிஷ் ராவ்ப் இருவரும் சரியான வீரர்களாக இருப்பார். அவர்களை பயன்படுத்திக் கொள்ளலாம்.

தற்போது வரை பாகிஸ்தான் அணி டிரைவர் சீட்டில் இருக்கிறது. ஆனால் இந்திய அணியில் பினிஷர் ரோலில் இருக்கும் ஹர்திக் பாண்டியாவை குறைத்து எடை போடக்கூடாது. எந்த நேரத்திலும் ஆட்டத்தை போக்கை மாற்றக்கூடிய கேம்-சேஞ்சராக இருப்பார். பந்துவீச்சிலும் அவரது ஆதிக்கம் சற்று அதிகமாகவே தெரியும் என்பதால், பாகிஸ்தான் வீரர்கள் கவனத்துடன் இருக்க வேண்டும்.” என்று எச்சரித்திருக்கிறார்.

Mohamed:

This website uses cookies.