மிக முக்கியமான வீரர் அதிரடி நீக்கம்..? விஷப்பரீட்சை மேற்கொள்ளும் இந்திய அணி; அரையிறுதி போட்டிக்கான இந்திய அணியின் ஆடும் லெவன் இது தான் !!

மிக முக்கியமான வீரர் அதிரடி நீக்கம்..? விஷப்பரீட்சை மேற்கொள்ளும் இந்திய அணி; அரையிறுதி போட்டிக்கான இந்திய அணியின் ஆடும் லெவன் இது தான்

உலகக்கோப்பை தொடரின் அரையிறுதி போட்டிக்கான இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவன் குறித்து இங்கு பார்ப்போம்.

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் குரூப் ஸ்டேஜ் முடிவில் இந்தியா, ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா மற்றும் நியூசிலாந்து ஆகிய நான்கு அணிகள் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றன.

இதில் புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் இந்திய அணிக்கும், நான்காவது இடத்தில் இருக்கும் நியூசிலாந்து அணிக்கும் இடையேயான முதல் அரையிறுதி போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற உள்ளது.

குரூப் ஸ்டேஜில் நியூசிலாந்து அணியை இந்திய அணி இலகுவாக வீழ்த்தியிருந்தாலும், அரையிறுதி போட்டி இந்திய அணிக்கு சவால் நிறைந்த போட்டியாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அரையிறுதி போட்டிக்கான இந்திய அணியின் ஆடும் லெவனை பொறுத்தவரையில் ஒரு மாற்றம் இருக்கலாம் என எதிர்பார்கப்படுகிறது. அரையிறுதி போட்டிக்கான ஆடுகளம் சுழற்பந்துவீச்சிற்கு சாதகமாக வடிவமைக்க திட்டமிடப்பட்டுள்ளதால் இந்திய அணி தனது ஆடும் லெவனில் ரவிச்சந்திர அஸ்வினுக்கு இடம் கொடுக்க திட்டமிட்டிருப்பதாக பிசிசிஐ., வட்டாரத்தில் இருந்து வெளியாகியுள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்திய அணியின் டாப் ஆர்டரில் எந்த மாற்றமும் இருக்காது. சுப்மன் கில் மற்றும் ரோஹித் சர்மா துவக்க வீரர்களாகவும், விராட் கோலி, ஸ்ரேயஸ் ஐயர் மற்றும் கே.எல் ராகுல் ஆகியோர் மிடில் ஆர்டரிலும் களமிறங்குவார்கள்.

அஸ்வினுக்கு ஆடும் லெவனில் இடம் கிடைத்தால் சூர்யகுமார் யாதவ் ஆடும் லெவனில் இருந்து நீக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஹர்திக் பாண்டியா உலகக்கோப்பை தொடரில் இருந்து விலகியுள்ளதால் அஸ்வினை ஆடும் லெவனில் சேர்க்க வேண்டும் என்றால் பேட்ஸ்மேன் ஒருவரை தான் நீக்கியாக வேண்டும் என்ற நிலையில் இந்திய அணி இருப்பதால் சூர்யகுமார் யாதவ் ஆடும் லெவனில் இருந்து நீக்கப்படவே வாய்ப்புகள் அதிகம்.

ஆல் ரவுண்டராக ரவீந்திர ஜடேஜாவும், சுழற்பந்து வீச்சாளராக குல்தீப் யாதவும், வேகப்பந்து வீச்சாளர்கள் வரிசையில் முகமது சிராஜ், முகமது ஷமி மற்றும் பும்ராஹ் ஆகியோருமே இடம்பெறுவார்கள் என தெரிகிறது.

நியூசிலாந்து அணியுடனான போட்டிக்கான இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவன்; 

ரோஹித் சர்மா, சுப்மன் கில், விராட் கோலி, ஸ்ரேயஸ் ஐயர், கே.எல் ராகுல், சூர்யகுமார் யாதவ்/ ரவிச்சந்திர அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், முகமது சிராஜ், முகமது ஷமி, ஜஸ்ப்ரிட் பும்ராஹ்.

Mohamed:

This website uses cookies.