இந்திய அணி அபாரம்: ஒரு வழியாக 2 அரைசதம் அடித்த இந்திய வீரர்கள்

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 264 ரன்கள் எடுத்து 5 விக்கெட்டுகளை இழந்துள்ளது.

இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் ஜமைக்காவில் உள்ள கிங்ஸ்டன் சபினா பார்க்கில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் ஜேசன் ஹோல்டர் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

இதனையடுத்து இந்திய அணியின் தொடக்க ஆட்டகாரர்களாக ராகுல், அகர்வால் களமிறங்கினர். ராகுல் 13 ரன்கள் எடுத்த நிலையில் ஹோல்டர் பந்து வீச்சில் ரஹீம் கார்ன்வாலிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்த வந்த புஜாரா 6 ரன்னில் ரஹீம் கார்ன்வால் பந்து வீச்சில் வெளியேறினார்.

Jason Holder, Captain of the West Indies on day one of the second test match between the West Indies and India held at the Sabina Park, Jamaica on the 30th August 2019 Photo by Ron Gaunt / SPORTZPICS for BCCI

இந்நிலையில் அகர்வால் உடன் ஜோடி சேர்ந்த கேப்டன் கோலி நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தனர். அகர்வால் டெஸ்டில் தனது 3-வது அரை சதத்தை பதிவு செய்தார். அவர் 55 ரன்கள் இருந்த நிலையில் ஹோல்டர் பந்து வீச்சில் ரஹீம் கார்ன்வாலிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்து வந்த ரகானே கேப்டன் விராட் கோலி உடன் ஜோடி சேர்ந்தார். நிதானமாக விளையாடிய விராட் கோலி அரை சதத்தை கடந்தார். இதனையடுத்து ரகானே 24 ரன்களிலும் கேப்டன் விராட் கோலி 76 ரன்களிலும் வெளியேறினர்.

சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் இழந்த நிலையில் விகாரி ரிஷப் பந்த் ஜோடி பொறுப்புடன் ஆடி வருகின்றனர். விகாரி 80 பந்துகளில் 42 ரன்களிலும் ரிஷப் பந்த் 64 பந்துகளில் 27 ரன்களிலும் ஆடி வருகின்றனர். இந்திய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 264 ரன்கள் எடுத்தனர்.

Jason Holder, Captain of the West Indies celebrates the wicket of K. L. Rahul of India on day one of the second test match between the West Indies and India held at the Sabina Park, Jamaica on the 30th August 2019 Photo by Ron Gaunt / SPORTZPICS for BCCI

வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் கேப்டன் ஹோல்டர் 3 விக்கெட்டுகளும், ரோச், ரஹீம் கார்ன்வால் தலா ஒரு விக்கெட்டுகளும் வீழ்த்தினர். அறிமுக போட்டியில் களம் இறங்கிய ரஹீம் கார்ன்வால் ஒரு விக்கெட் மற்றும் 2 கேட்ச் பிடித்து அசத்தி உள்ளார்.

Sathish Kumar:

This website uses cookies.