நேற்றைய வெற்றியின் மூலம் இந்தியா 7 சாதனைகள் படைத்துள்ளது!!

இலங்கை அணியுடனான ‘டி20’ தொடர் வெற்றி இன்றைய கிறிஸ்துமஸ் பண்டிகைக்கான சிறந்த பரிசாக அமைந்தது. இந்திய அணியினர், கிறிஸ்துமஸ் பிரத்யேக தொப்பி அணிந்து, கோப்பையுடன் உற்சாகமாக ‘போஸ்’ கொடுத்தனர்.

1.சகால் செம்ம :

‘டுவென்டி-20’ தொடரில் அதிக விக்கெட் கைப்பற்றிய பவுலர்கள் பட்டியலில், இந்தியாவின் யுவேந்திர சகால், முதலிடம் பிடித்தார். இவர், 2 போட்டியில் 8 விக்கெட் வீழ்த்தினார். இவரை அடுத்து இந்தியாவின் ஹர்திக் பாண்ட்யா (6 விக்.,), குல்தீப் யாதவ் (6), ஜெயதேவ் உனத்கத் (4) உள்ளனர்.

3.ரோகித் மீண்டும் சாதனை :

இத்தொடரில் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் வரிசையில் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா, முதலிடம் பிடித்தார். இவர், 3 போட்டியில் ஒரு சதம் உட்பட 162 ரன்கள் எடுத்தார். அடுத்த இரண்டு இடங்களை இந்தியாவின் லோகேஷ் ராகுல் (154 ரன்), இலங்கையின் குசால் பெரேரா (100) கைப்பற்றினர்.

இந்த வருடம் மட்டும் அனைத்து வகையான போட்டிகளிலும் சேர்த்து மொத்தம் 65 சிக்ஸர்கள் விளாசியுள்ளார் ரோகித். இதில், இலங்கைக்கு எதிராக மட்டும் 2017ல் மொத்தம் 38 சிக்ஸர்கள்.விளாசியுள்ளார். எந்த ஒரு பேட்மேனும் எந்த இரு தனி அணிக்கு எதிராக அடித்த அதிக சிக்ஸர்கள் இது மட்டுமே. இதற்கு முன்னர் 2012ல் கிறிஸ் கெய்ல் நியூசிலாந்து அணிக்கு எதிராக 33 சிக்ஸர்கள் அடித்ததே அதிகமாக இருந்தது.

3.தொடர் நாயகன் உனத்காட் :

நேற்று பவுலிங்கில் அசத்திய இந்தியாவின் ஜெயதேவ் உனத்கத் (4 ஓவரில், 15 ரன், 2 விக்கெட்), ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதை கைப்பற்றினார்.

4.2017ல் இந்தியா அதிக வெற்றிகள் :

37 இலங்கைக்கு எதிராக கிடைத்த வெற்றி, இந்த ஆண்டு சர்வதேச போட்டிகளில் இந்தியாவுக்கு கிடைத்த 37 வது வெற்றி (டெஸ்டில் 7 + ஒருநாள் போட்டியில் 21 + ‘டுவென்டி-20’யில் 9). இதன்மூலம் ஒரு ஆண்டில் அதிக சர்வதேச வெற்றிகளை பதிவு செய்த அணிகளுக்கான பட்டியலில் 2வது இடம் பிடித்தது. முதலிடத்தில் ஆஸ்திரேலியா (38 வெற்றி, 2003, கேப்டன்: பாண்டிங்) உள்ளது. 14 சர்வதேச அரங்கில், இந்த ஆண்டு இந்திய அணி 14வது முறையாக தொடரை கைப்பற்றி கோப்பை வென்றது.

5.அடுத்தடுத்து தொடர் வெற்றிகள் :

இங்கிலாந்துக்கு எதிராக ஒருநாள் மற்றும் ‘டுவென்டி-20’ தொடரை வென்ற இந்திய அணி, அதன்பின், வங்கதேசம் (டெஸ்ட்), ஆஸ்திரேலியா (டெஸ்ட், ஒருநாள்), வெஸ்ட் இண்டீஸ் (ஒருநாள்), இலங்கை (டெஸ்ட், ஒருநாள், ‘டுவென்டி-20), நியூசிலாந்து (ஒருநாள், ‘டுவென்டி-20’), மீண்டும் இலங்கை (டெஸ்ட், ஒருநாள், ‘டுவென்டி-20’) அணிகளுக்கு எதிராக கோப்பை வென்றது.

6.டி20யில் ஒரே அணிக்கு எதிராக அதிக வெற்றிகள் :

10 சர்வதேச ‘டுவென்டி-20’ அரங்கில் இந்திய அணி இலங்கைக்கு எதிராக 10வது வெற்றியை பதிவு செய்தது. இதுவரை 14 போட்டியில் 10 வெற்றி, 4 தோல்வி பெற்றுள்ளது. இதன் மூலம், ‘டுவென்டி-20’யில் ஒரு அணிக்கு எதிராக 10வது வெற்றியை இரண்டாவது முறையாக பெற்றது. ஏற்கனவே, ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இந்த இலக்கை (15 போட்டி,10 வெற்றி, 5 தோல்வி) எட்டியது.

7.டி20 தொடர் 6ஆவது முறை :

6 நேற்று அசத்திய இந்திய அணி, இரு அணிகள் மோதிய 3 ‘டுவென்டி-20’ போட்டிகள் கொண்ட தொடரை 6வது முறையாக கைப்பற்றியது. இதுவரை, 8 தொடரில் (ஆஸி.,-2016, இலங்கை- 2016, ஜிம்பாப்வே- 2016, இங்கிலாந்து- 2017, நியூசிலாந்து- 2017, இலங்கை-2017 ) 6 முறை கோப்பை வென்றுள்ளது. ஒரு முறை தென் ஆப்ரிக்காவிடம் (2015) வீழ்ந்தது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு தொடர் (2017) ‘டிரா’ ஆனது. இதன் மூலம், சொந்த மண்ணில் முதல் முறையாக ‘டுவென்டி-20’ தொடரை 3-0 என முழுமையாக வென்றது.

Editor:

This website uses cookies.