நீங்க சரிப்பட்டு வரமாட்டீங்க தம்பி… இளம் வீரர் அதிரடி நீக்கம்; அடுத்த போட்டிக்கான இந்திய அணி இது தான் !!

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இலங்கை அணியுடனான போட்டிக்கான இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவன் குறித்து பார்ப்போம்.

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் பாகிஸ்தான் மற்றும் ஹாங்காங் அணிகளை வீழ்த்தி சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்ற இந்திய அணி, சூப்பர் 4 சுற்றில் மீண்டும் பாகிஸ்தானை எதிர்கொண்டு, அதில் பாகிஸ்தானிடம் தோல்வியடைந்தது.

பாகிஸ்தான் அணிக்கு எதிரான கடந்த போட்டியில் தோல்வியடைந்த இந்திய அணி, இன்று நடைபெறும் போட்டியில் இலங்கை அணியை எதிர்கொள்ள உள்ளது.

தோல்வியில் இருந்து மீண்டு இந்த போட்டியில் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி இருப்பதால், இலங்கை அணிக்கு எதிரான இந்த போட்டி பரபரப்பிற்கு பஞ்சம் இல்லாமல் இருக்கும் என தெரிகிறது. கடந்த போட்டியில் சொதப்பிய ஹர்திக் பாண்டியா போன்ற இந்திய அணியின் முக்கிய வீரர்கள் இன்றைய போட்டியில் எப்படி செயல்படுகிறார்கள் என்பதை பார்க்க ரசிகர்களும் மிகுந்த ஆவலுடன் காத்திருப்பதால் இந்த போட்டி மீது அதிக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

துபாயில் நடைபெறும் இந்த போட்டிக்கான இந்திய அணியை பொறுத்தவரையில் ஓரிரு மாற்றங்கள் இருக்கலாம் என தெரிகிறது. பேட்டிங் ஆர்டரில் மாற்றங்கள் இருக்க வாய்ப்பு இல்லை என்றே தெரிகிறது. தினேஷ் கார்த்திக்கிற்கு இந்த போட்டியிலும் வாய்ப்பு கிடைக்காது என்றே தெரிகிறது. கடந்த போட்டியை போன்று இந்த போட்டியிலும் ரிஷப் பண்ட்டிற்கே இடம் கிடைக்கும் என தெரிகிறது.

ஆல் ரவுண்டர்கள் வரிசையில் தீபக் ஹூடாவிற்கு இந்த போட்டியில் வாய்ப்பு கிடைக்காது என்றே தெரிகிறது. ஹர்திக் பாண்டியாவுடன், ரவிச்சந்திர அஸ்வினுக்கு இடம் கொடுக்கப்படலாம் என சில தகவல்கள் தெரிவிக்கின்றன. ரவி பிஸ்னோய் அல்லது ரவிச்சந்திர அஸ்வின் ஆகியோரில் ஒருவருக்கு இடம் கிடைக்கும். தீபக் ஹூடா அணியில் இருந்து நீக்கப்பட்டால் அவருக்கு பதிலாக ஆவேஸ் கானிற்கு மீண்டும் இடம் கொடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பந்துவீச்சை பலப்படுத்தும் விதமாக இந்திய அணி இந்த போட்டியில் ஆவேஸ் கானிற்கு இடம் கொடுக்கும். இது தவிர அர்ஸ்தீப் சிங், புவனேஷ்வர் குமார், யுஸ்வேந்திர சாஹல் ஆகியோருக்கு இடம் கிடைக்கும்.

இலங்கை அணியுடனான போட்டிக்கான இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவன்;

ரோஹித் சர்மா, கே.எல் ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்டியா, ரவிச்சந்திர அஸ்வின்/ரவி பிஸ்னோய், புவனேஷ்வர் குமார், ஆவேஸ் கான்,யுஸ்வேந்திர சாஹல், அர்ஸ்தீப் சிங்.

Mohamed:

This website uses cookies.