இளம் அதிரடி நாயகனுக்கு இடம்… ஹர்திக் பாண்டியா கேப்டன்; டி.20 தொடருக்கான இந்திய அணியை அறிவித்தது பிசிசிஐ !!

இளம் அதிரடி நாயகனுக்கு இடம்… ஹர்திக் பாண்டியா கேப்டன்; டி.20 தொடருக்கான இந்திய அணியை அறிவித்தது பிசிசிஐ

விண்டீஸ் அணியுடனான டி.20 தொடருக்கான இந்திய அணியை, இந்திய கிரிக்கெட் வாரியமான பிசிசிஐ., அறிவித்துள்ளது.

வெஸ்ட் இண்டீஸிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, விண்டீஸ் அணியுடன் இரண்டு டெஸ்ட் போட்டி, மூன்று ஒருநாள் போட்டி மற்றும் ஐந்து டி.20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

இரு அணிகள் இடையேயான இந்த தொடர் 12ம் தேதி துவங்க இருக்கும் நிலையில், இதில் முதலில் நடைபெறும் டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடர்களுக்கான இந்திய அணியை பிசிசிஐ., கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிவித்திருந்தது.

இந்தநிலையில், ஐந்து போட்டிகள் கொண்ட டி.20 தொடருக்கான இந்திய அணியையும் பிசிசிஐ., தற்போது அறிவித்துள்ளது.

கடந்த டி.20 தொடர்களை போன்று விண்டீஸ் அணியுடனான டி.20 தொடருக்கும் ஹர்திக் பாண்டியாவே கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளதால், ரோஹித் சர்மா, விராட் கோலி போன்ற சீனியர் வீரர்களுக்கு விண்டீஸ் அணியுடனான டி.20 தொடரிலும் இடம் கிடைக்கவில்லை.

சூர்குமார் யாதவ் டி.20 தொடருக்கான துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய திலக் வர்மாவிற்கு முதல் முறையாக இந்திய அணியில் இடம் கிடைத்துள்ளது.

இது தவிர சுப்மன் கில், ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன், ரவி பிஸ்னோய், அர்ஸ்தீப் சிங், உம்ரன் மாலிக், ஆவேஸ் கான் மற்றும் முகேஷ் குமார் போன்ற வீரர்களுக்கும் விண்டீஸ் அணியுடனான டி.20 தொடருக்கான இந்திய அணியில் இடம் கிடைத்துள்ளது.

விண்டீஸ் அணியுடனான டி.20 தொடருக்கான இந்திய அணி;

இஷான் கிஷன், சுப்மன் கில், யசஸ்வி ஜெய்ஸ்வால், திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ் (துணை கேப்டன்), சஞ்சு சாம்சன், ஹர்திக் பாண்டியா (கேப்டன்), அக்‌ஷர் பட்டேல், யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், ரவி பிஸ்னோய், அர்ஸ்தீப் சிங், உம்ரன் மாலிக், ஆவேஸ் கான், முகேஷ் குமார்.

Mohamed:

This website uses cookies.