இந்தியா பங்கேற்கும் ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட புதிய தொடர் அறிவிப்பு!
இந்திய அணி 2021 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மிக நீண்ட தொடரில் விளையாட இருக்கிறது. இதற்கான அட்டவணை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தற்போது வெளியிட்டு இருக்கிறது. இதன்படி எப்போதும் போல் இந்திய அணி இங்கிலாந்தில் 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாட இருக்கிறது. இந்த டெஸ்ட் தொடர் 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் செப்டம்பர் அக்டோபர் மாதங்களில் நடக்க இருப்பதாக திட்டமிடப்பட்டிருக்கிறது. நாட்டிங்கம் மைதானத்தில் ஆகஸ்ட் 4 ஆம் தேதி முதல் டெஸ்ட் போட்டியும், கடைசி டெஸ்ட் போட்டி செப்டம்பர் 14ஆம் தேதி மார்ச் மாதத்திலும் நடைபெறப் போகிறது.
மேலும், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் கான அட்டவணையை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் வெளியிடவில்லை. ஏனென்றால் டெஸ்ட் போட்டிகளுக்கான சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் தான் நடக்கிறது. இதற்கான அட்டவணையை இன்னும் தயாரிக்கவில்லை. இதுகுறித்து இந்திய அணியும் பெரிதாக எந்த வித திட்டமிடல் அட்டவணையை வெளியிடவில்லை
தற்போதைக்கு ஆஸ்திரேலியாவில் நடைபெறப்போகும் 4 டெஸ்ட் 3 ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகள் கொண்ட மிக நீண்ட தொடரில் இந்திய அணி தனது முழு கவனத்தையும் செலுத்தி வருகிறது. இதனையடுத்து இங்கிலாந்து அணி இந்தியாவில் வந்து விளையாட இருக்கிறது. அதன் பின்னர் சில தொடர்களை எடுத்து ஐபிஎல் தொடர் நடைபெறும் அதனையடுத்து தான் இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.
மேலும், புதிதாக ஒரு விஷயம் என்னவென்றால் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ள அட்டவணையில் உள்ள போட்டிகளுக்கு மைதானத்தில் ரசிகர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அறிவித்திருக்கிறது. முன்னதாக இந்திய அணி ஆஸ்திரேலியாவில் விளையாடப் போகும் டெஸ்ட் இருக்குமே சதவீத விகிதத்தில் அவ்வப்போது ரசிகர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
2021 ஆம் ஆண்டில் இந்தியாவின் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின் அட்டவணை
1 வது டெஸ்ட்: ஆகஸ்ட் 4-8, ட்ரெண்ட் பிரிட்ஜில், நாட்டிங்ஹாம்
2 வது டெஸ்ட்: ஆகஸ்ட் 12-16 லார்ட்ஸ், லண்டன்
3 வது டெஸ்ட்: ஆகஸ்ட் 25-29, தலைப்பு, லீட்ஸ்
4 வது டெஸ்ட்: செப்டம்பர் 2 -6 ஓவல், லண்டன்
5 வது டெஸ்ட்: செப்டம்பர் 10-14 மான்செஸ்டரின் ஓல்ட் டிராஃபோர்டில்