விராத் கோஹ்லி இப்படி தான் ஆடணும் – இந்திய அணியின் முன்னாள் வீரர் கருத்து

இந்திய அணியின் கேப்டன் விராத் கோஹ்லி 3வது இடத்தில பாடுவதே மிக சிறந்தது என முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ஜாகீர் கான் கருத்து தெரிவித்துள்ளார்.

இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் இரண்டு டி.20 போட்டிகள் மற்றும் ஐந்து ஒருநாள் போட்டிகள் தொடரில் பங்கேற்றுள்ளது.

இதில் முதலில் நடைபெற்ற டி.20 தொடரை இந்திய அணி முழுமையாக இழந்த நிலையில் இரு அணிகள் இடையேயான ஒருநாள் தொடர் தற்பொழுது நடைபெற்று வருகிறது.

இந்த தொடரின் முதல் மூன்று போட்டிகள் முடிவில் இந்திய அணி இரண்டு போட்டியிலும், ஆஸ்திரேலிய அணி ஒரு போட்டியிலும் வெற்றி பெற்றிருந்த நிலையில் இரு அணிகள் இடையேயான நான்காவது ஒருநாள் மொஹாலியில் நடைபெற்றது.

அதில் தோனி ஓய்வளிக்கப்பட்டு அவருக்கு பதில் ரிஷப பண்ட் சேர்க்கப்பட்டார். அம்பதி ராயுடு அமர்த்தப்பட்டு அவருக்கு பதிலாக கே எல் ராகுல் ஆட  வைக்கப்பட்டார்.

துவக்க வீரர்கள் அசத்தலாக ஆடினார். தவான் சதமடித்தார். ரோஹித் துரதிஷ்ட வசமாக 95 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதனை தொடர்ந்து, வழக்கமாக 3வதாக களமிறங்கும் கோஹ்லி இம்முறை கே எல் ராகுலை இறங்க பணித்தார். கே எல் ராகுலும் பெரிதும் ஜோபிக்கவில்லை.

தொடர்ந்து இரண்டு போட்டிகளில் சதமடித்த கோஹ்லி இம்முறை சொற்ப ரன்களுக்கு வெளியேறி அதிர்க்கு உள்ளாக்கினார்.

இந்திய அணியின் கீழ் ஆர்டர் சரியாக ஆடாததால் இறுதி 10 ஓவர்களில் இந்திய அணி குறைவான ரன்களே அடித்தது. 4வது போட்டியில் இந்திய அணி தோல்வியே தழுவியது.

இதற்காக பலரும் பலவித கருத்துக்களை தெரிவித்து வரும் நிலையில், இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ஜாஹீர் கான் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

அவர் கூறியதாவது – “வழக்கமாக 3வது இடத்தில் இறங்கும் கோஹ்லி 4வது இடத்தில் இறங்கியது மிகவும் தவறான ஒன்றாக நான் பார்க்கிறேன். துவக்க வீரர்கள் சிறப்பாக செயல்பட்ட நிலையில் அதை தொடர்ந்து எடுத்தது செல்ல நல்ல நிலையில் உள்ள பேட்ஸ்மேன் வேண்டும். ராகுல் நீண்ட இடைவேளைக்கு பின் தற்போது இறங்கியுள்ளார். அவரிடம் எதிர்பார்ப்பது சரியானது அல்ல” என கூறினார்

Prabhu Soundar:

This website uses cookies.