ஐபிஎல் தொடரில் மாஸ் காட்டிய வீரருக்கு இடம்… ஜடேஜா ரீண்ட்ரீ; வங்கதேச தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு !!

ஐபிஎல் தொடரில் மாஸ் காட்டிய வீரருக்கு இடம்… ஜடேஜா ரீண்ட்ரீ; வங்கதேச தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு

வங்கதேச அணியுடனான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ., அறிவித்துள்ளது.

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி.20 உலகக்கோப்பை தொடருக்கு பிறகு நியூசிலாந்து செல்லும் இந்திய கிரிக்கெட் அணி, நியூசிலாந்து அணியுடன் மூன்று டி.20 போட்டிகள் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. அதன்பின் வங்கதேசம் செல்லும் இந்திய அணி, வங்கதேச அணியுடன் மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது.

டிசம்பர் மாதம் 4ம் தேதி இந்தியா – வங்கதேசம் இடையேயான ஒருநாள் தொடர் துவங்க உள்ள நிலையில், இந்த தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ., இன்று அறிவித்துள்ளது.

வங்கதேச அணிக்கு எதிரான தொடருக்கு முன்பாக நடைபெற இருக்கும் நியூசிலாந்து அணியுடனான தொடரில் இருந்து ஓய்வு வழங்கப்பட்டிருந்த ரோஹித் சர்மா, விராட் கோலி போன்ற சீனியர் வீரர்கள் அனைவரும், வங்கதேச அணியுடனான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் இடம்பெற்றுள்ளனர். இதனால் ரோஹித் சர்மா கேப்டனாகவும், கே.எல் ராகுல் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பேட்ஸ்மேன்களாக ஷிகர் தவான், விராட் கோலி, ஸ்ரேயஸ் ஐயர், ராகுல் த்ரிபாட்டி ஆகியோருடன் ஐபிஎல் தொடரில் பெங்களூர் அணிக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ராஜத் படித்தருக்கும் அணியில் இடம் கிடைத்துள்ளது. விக்கெட் கீப்பர்களாக ரிஷப் பண்ட் மற்றும் இஷான் கிஷன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். காயத்தால் அவதிப்பட்டு வரும் ரவீந்திர ஜடேஜா வங்கதேச அணியுடனான தொடரில் ரீ எண்ட்ரீ கொடுக்க உள்ளார். ஆல் ரவுண்டர்கள் வரிசையில் அக்‌ஷர் பட்டேல் மற்றும் வாசிங்டன் சுந்தர் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.

பந்துவீச்சாளர்கள் வரிசையில் முகமது ஷமி, முகமது சிராஜ், தீபக் சாஹர் ஆகியோருடன், ஐபிஎல் தொடரில் குஜராத் அணிக்காக பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்ட யஸ் தயலுக்கு முதல் முறையாக அணியில் இடம் கொடுக்கப்பட்டுள்ளது.

வங்கதேச அணியுடனான ஒருநாள் தொடருக்கான இந்திய அணி;

ரோஹித் சர்மா, கே.எல் ராகுல், ஷிகர் தவான், விராட் கோலி, ராஜத் படித்தர், ஸ்ரேயஸ் ஐயர், ராகுல் த்ரிபாட்டி, ரிஷப் பண்ட், இஷான் கிஷன், ரவீந்திர ஜடேஜா, அக்‌ஷர் பட்டேல், வாசிங்டன் சுந்தர், ஷர்துல் தாகூர், முகமது ஷமி, முகமது சிராஜ், தீபக் சாஹர், யஸ் தயால்.

 

Mohamed:

This website uses cookies.