மீண்டும் சீனியர் வீரர்களுக்கு இடமில்லை… ஹர்திக் பாண்டியா கேப்டன்; நியூசிலாந்து டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு!

நியூசிலாந்து அணியுடன் நடைபெறும் டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை அணியுடனான ஒருநாள் தொடர் முடிவுற்ற பிறகு வருகிற ஜனவரி 18ஆம் தேதி முதல் பிப்ரவரி 1ஆம் தேதி வரை நியூசிலாந்து அணியுடன் மூன்று டி20 போட்டிகள் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற உள்ளது. முதல் கட்டமாக ஒருநாள் தொடரும் அடுத்ததாக டி20 தொடரும் நடக்கவிருக்கிறது.

ஜனவரி மாதம் ஏழாம் தேதி புதிய தேர்வுக்குழு தலைவராக இரண்டாவது முறையாக சேத்தன் சர்மா நியமிக்கப்பட்டார். அவருடன் சேர்ந்து 4 பேர் புதிய உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டு இருக்கின்றனர். இவர்கள் தலைமையிலான குழு வருகிற நியூசிலாந்து டி20 தொடர் மற்றும் ஆஸ்திரேலியா அணியுடன் நடைபெறும் டெஸ்ட் தொடரின் முதல் இரண்டு போட்டிகளுக்கான இந்திய அணியை தேர்வு செய்து அறிவித்துள்ளது.

நியூசிலாந்து டி20 தொடருக்கான இந்திய அணியில் விராட் கோலி, ரோஹித் சர்மா, கேஎல் ராகுல் போன்ற சீனியர் வீரர்களுக்கு இடம் மறுக்கப்பட்டு இருக்கிறது. இதில் கேஎல் ராகுல் மற்றும் அக்சர் பட்டேல் இருவருக்கு மட்டும் சொந்த காரணங்களுக்காக டி20 தொடரில் இடம் பெறவில்லை என குறிப்பிட்டு இருக்கிறது.

 

ஆனால் விராட் கோலி, ரோஹித் சர்மா இருவர் பற்றி எதுவும் குறிப்பிடவில்லை என்பதால், இனி டி20 பிளானில் அவர்கள் இல்லை என புரிந்துகொள்ள முடிகிறது. ஜஸ்பிரித் பும்ரா இந்த தொடரிலும் இடம் பெறவில்லை. அதேபோல் இலங்கை அணியுடன் டி20 தொடரில் இடம் பெற்றிருந்த சஞ்சு சாம்சன்-க்கு இடம் கொடுக்கப்படவில்லை. ஜித்தேஷ் சர்மா அவருக்கு பதிலாக உள்ளே வந்திருக்கிறார்.

நியூசிலாந்து டி20 தொடரில் பங்கேற்கும் இந்திய அணி

ஹர்திக் பாண்டியா (கேப்டன்), சூர்யகுமார் யாதவ் (து.கேப்டன்), இஷான் கிஷன் (கீப்பர்), ருத்துராஜ் கெய்க்வாட், ஷுப்மன் கில், தீபக் ஹூடா, ராகுல் திரிபாதி, ஜிதேஷ் சர்மா (கீப்பர்), வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், யூசி., சாஹல் , அர்ஷ்தீப் சிங், உம்ரான் மாலிக், சிவம் மாவி, பிருத்வி ஷா, முகேஷ் குமார்.

Mohamed:

This website uses cookies.