நியூசிலாந்து அணிக்கு எதிரான இந்தியாவின் டி20 அணி அறிவிப்பு

நியூசிலாந்து அணி இந்தியாவின் சுற்றுப்பயணம் செய்து 3 ஒரு நாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடவுள்ளது. நேற்று நடந்த முதல் ஒருநாள் போட்டியில் நியிசிலாந்து அணி 4 விக்கெட் வித்யாசத்தில் வெற்றி பெற்றது.

முன்னரே நியூசிலாந்து அணி இரண்டு வகையான போட்டிகளுக்கும் வீரர்களை அறிவித்துவிட்டது. ஒரு வாரத்திற்கு முன்னர் இந்தியான் ஒருநாள் அணியை அறிவித்தது பி.சி.சி.ஐ.

தற்போது நியூசிலாந்து அணியுடன் மோதும் டி20 அணியையும் அறிவித்துள்ளது இந்திய கிரிக்கெட் வாரியம். இந்த அணியில் 16 பேர் இடம் பெற்றுள்ளனர். இந்த தொடரிலும் இந்திய அணிக்கு கேப்டனாக விராட் கோலியே செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோகித் சர்மா துணைக் கேப்டனாக நீடிப்பார்.

ஒருநாள் போட்டிகளுக்கான அணியில் இருந்து கலட்டி விடப்பட்ட          கே.எல் .ராகுல் டி20 தொடருக்கு அணியில் அழைக்கப்பட்டுள்ளார். ஒருநாள் தொடருக்கு அழைக்கப்பட்ட தினேஷ் கார்த்திக் டி20 அணியிலும் சேர்க்கப்பட்டுள்ளார். மேலும், அணிக்கு புதிதாக மும்பை அதிரடி பேட்ஸ்மேன் ஷ்ரேயஸ் அய்யர் அணிக்கு அறிமுகமாக அழைக்கப்பட்டுள்ளார். இவர் தொடர்ந்து ஐ.பி.எல் மற்றும் உள்ளூர் போட்டிகளில் அசத்தியவர் ஆவார்.

ஆல் ரவுண்டர் தரப்பில் ஹர்திக் பாண்டியா மற்றும் அகசர் படேல் அணியில் நீடிக்கின்றனர். வேகப்பந்து பந்து வீச்சாளர்களில் ஐ.பி.எல் தொடரில் ஹைதராபாத் அணிக்காக அசத்திய முகமது சிராஜ் அணிக்கு அழைக்கப்பட்டுள்ளர். இவர் அறிமுக தொடரில் களம் இறங்குவது குறிப்பிடத்தக்கது. மேலும், கேதர் ஜாதவ் அணியில் இருந்து கலட்டி விடப்பட்டுள்ளார்

மேலும், குல்தீப் யாதவ், யுஜவேந்திர சகால் சுழல் பந்திலும், ஆசிஷ் நெஹ்ரா, புவனேஷ்வர் குமார் மற்றும் ஜஸ்பிரிட் பும்ரா  ஆகியோர்  வேகப்பந்து வீச்சிலும் அசத்த காத்திருக்கின்றனர்.

இந்திய டி20 அணி : விராட் கோலி(கேப்டன்), சிகர் தவன், ரோகித் சர்மா, தினேஷ் கார்த்திக், மணீஷ் பாண்டே, கே.எல் ராகுல், ஹர்திக் பாண்டியா, எம்.எஸ் தோனி, அக்சர் படேல், யுஜவேந்திர சகால், குல்தீப் யாதவ், புவனேஷ்வர் குமார், ஜஸ்பிரிட் பும்ரா, ஆசிஷ் நெஹ்ரா, முகமது சிராஜ், ஷ்ரேயஸ் அய்யர்

நியூசிலாந்தின் டி20 தொடருக்கான அணி கீழே கொடுக்கப்பட்டுள்ளது

டி 20 தொடருக்கான அணி: வில்லியம்சன் (கேப்டன்), டிரென்ட் போல்ட், டாம் புரூஸ், டி கிராண்ட்ஹோம், மார்ட்டின் கப்தில், மேட் ஹென்றி, டாம் லதாம், ஹென்றி நிக்கோல்ஸ், ஆடம் மில்னே, காலின் முன்ரோ, கிளென் பிலிப்ஸ், மிட்செல் சான்டர், இஸ் சோதி, டிம் சவுத்தி.

டி20 போட்டிகள்

  • முதல் டி20 போட்டி, நவ.1, டெல்லி (நெஹ்ரா ஓய்வு)
  • 2ஆவது டி20 போட்டி, நவ.4, ராஜ்கோட்
  • 3ஆவது டி20 போட்டி, நவ.7, திருவனந்தபுரம் (புதிய மைதானம்)

Editor:

This website uses cookies.