சஞ்சு சாம்சன், மணிஷ் பாண்டேவை அணியில் இருந்து நீக்க கூடாது; ஆகாஷ் சோப்ரா சொல்கிறார் !!

இந்திய அணியின் முன்னாள் வீரரும் தற்போதைய வர்ணனையாளருமான ஆகாஷ் சோப்ரா மனிஷ் பாண்டே மற்றும் சஞ்சு சாம்சன் ஆகிய இருவருக்கும் இன்னும் சில வாய்ப்பு அளிக்குமாறு தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலிய அணியுடன் மூன்று ஒருநாள் போட்டிகள், மூன்று டி.20 போட்டிகள் மற்றும் நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கவுள்ளது.

ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஒருநாள் போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலிய அணியிடம் 2-1 என்ற புள்ளி பட்டியல் அடிப்படையில் தோல்வியடைந்தது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் அபாரமாக ஆடி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இருந்தபோதும் இந்திய அணி பேட்டிங் மிக சிறப்பாக இல்லை குறிப்பாக மிடில் ஆர்டரில் களமிறங்கும் மனிஷ் பாண்டே மற்றும் சஞ்சு சாம்சன் ஆகிய இருவரும் சிறப்பாக செயல்படவில்லை.

இந்திய அணிக்கு வாஷிங்டன் சுந்தர் வரை 8 வீரர்களும் பேட்டிங் செய்யக்கூடிய திறமை இருந்தபோதும் இந்திய அணி பேட்டிங்கில் சறுக்கியது.

ஹர்திக் பாண்டியா மற்றும் ஜடேஜா ஆகிய இருவரும் பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டு அணியின் ஸ்கோரை உயர்த்தினார்கள். இவர்கள் இல்லையென்றால் இந்திய அணி பெரும் நெருக்கடியை சந்தித்திருக்கும் என்று ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.

ஆகாஷ் சோப்ரா கூறியதாவது மனிஷ் பாண்டே மற்றும் சஞ்சு சாம்சன் இருவருக்கும் மீண்டும் வாய்ப்பளியுங்கள் ஏனென்றால் இது தான் அவர்களுக்கு முதல் t20 போட்டி.

இவர்கள் தங்களிடம் உள்ள குறைகளை கலைந்து மீண்டும் சிறப்பாக செயல்படுவார்கள் என்று அவர்களுக்கு ஆதரவாக தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறியதாவது ஜடேஜா மற்றும் ஹார்த்திக் பாண்டியா முன்னதாகவே பேட்டிங்கில் களமிறங்கினால் அணிக்கு இன்னும் அதிகமான ரன்களை சேர்க்க முடியும் என்று கூறினார்.

Mohamed:

This website uses cookies.