டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு; இளம் வீரருக்கு அணியில் இடம்
வங்கதேச அணியுடனான டெஸ்ட் தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணியை பி.சி.சி.ஐ., இன்று அறிவித்துள்ளது.
வங்கதேச அணி நவம்பர் மாதம் இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. ஷகிப்-அல்-ஹசன் தலைமையிலான 15 பேர் கொண்ட வங்கதேச அணி வீரர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ரோஹித் சர்மா தலைமையிலான அணியில் சஞ்சு சாம்சன் மற்றும் ஆல்-ரவுண்டர் சிவம் துபே இடம்பிடித்துள்ளனர்.
டி20 இந்திய அணி : ரோஹித் சர்மா (கேப்டன்), ஷிகார் தவான், கே.எல்.ராகுரல், சஞ்சு சாம்சன், ஷ்ரோயஸ் ஐயர், மனிஷ் பாண்டே, ரிஷப் பந்த், வாஷிங்டன் சுந்தர், குர்னால் பாண்டியா, சஹால், ராகுல் சாஹர், தீபக் சாஹர், கலீல் அஹமது, சிவம் துபே, சர்துல் தாகூர்
வங்கசேத அணி : சகிப்-உல்-ஹசன், தமீம் இக்பால், சௌமியா சர்கார், மஹமதுல்லா, மஷாடிக் ஹசேன், நைம் ஷேக், ஹரபத் சன்னி, ஹல்-ஹமீன்-அசேன், லிட்டன் தாஸ், முஸ்தஃபிர் ரஹீம், ஆஷிப் உசைன், முகமது சைப்புதின், அமிநுல் இஸ்லமாம், முஸ்தஃபிர் ரகுமான், சைஃபுல் இஸ்லாம்
இந்திய அணி (டெஸ்ட்) : விராட் கோலி, ரோஹித் சர்மா, மயங்க் அகர்வால், புஜாரா, ரஹானே, ஹனும விஹாரி, சஹா, ரவீந்திர ஜடேஜா, ரவிசந்திரன் அஸ்வின், குல்தீப் யாதவ், முகமது ஷமி, உமேஷ் யாதவ், இஷாந்த் சர்மா, சுப்மன் கில், ரிஷப் பந்த்